ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் ட்ராபி தொடரை 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று பத்து வருடங்களுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட் பும்ராவின் அபாரமான பந்துவீச்சு குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய தொடரில் அசத்திய பும்ரா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த இரண்டு முறையும் பார்டர் கவாஸ்கர் தொடரில் வெற்றி அடைந்த இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றும் நோக்கில் ஆஸ்திரேலியா வந்து இறங்கியது. ஆனால் இந்திய வீரர்களின் மோசமான செயல்பாட்டால் டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணி தொடரை இழந்தாலும் ஒரு சில வீரர்களின் பங்களிப்பு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தங்களால் முடிந்த வரை போராட்ட குணத்தை வெளிப்படுத்தினர்.
அதேபோல இளம் வீரர் நிதிஷ்குமார் ரெட்டி தனது அறிமுக தொடரில் சதம் அடித்து அசத்தினார். மேலும் உலகத்தின் நம்பர் ஒன் பவுலரான பும்ரா இந்த தொடரில் 32 விக்கட்டுகள் வீழ்த்திய நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக எதிர்பாராத விதமாக வெளியேறினார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட் பும்ரா நினைத்தால் சர் டான் பிராட்மேனின் விக்கட்டை கூட அவரால் கைப்பற்ற முடியும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
பும்ரா நினைத்தால் இதை செய்ய முடியும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தத் தொடரில் விராட் கோலி பெரிதாக ரன்கள் அடிக்க வில்லை என்றாலும் பார்வையாளர்களை தனது செயல்பாட்டின் மூலம் கவர்ந்ததற்காக அவருக்கு 10க்கு 7.5 மதிப்பெண்கள் கொடுப்பேன். அவர் ஒரு முழுமையான வீரர். இதில் நான் பும்ராவை மதிப்பிட மாட்டேன். உலக விளையாட்டில் அவருக்கு எந்த ஒரு எண்ணிக்கையும் பொருந்தாது. பும்ரா நினைத்தால் ஆஸ்திரேலியா ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சர் டான் பிராட்மேனின் விக்கெட்டை ஒரு சில பந்துகளால் வீழ்த்த முடியும் ” என்று கில்கிரிஸ்ட் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:ரோஹித் கோலி மீதான விமர்சனம் அடங்க.. இதுதான் ஒரே வழி.. ஆனா அவங்க தயாரா இருக்கணும் – ஹர்பஜன் சிங் பேட்டி
ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த பும்ரா அதற்குப் பிறகு காயம் காரணமாக அந்த போட்டியின் பாதியிலேயே வெளியேறியதால் அவரால் மேற்கொண்டுகள் விக்கட்டுகள் வீழ்த்த முடியவில்லை. ஒருவேளை அவர் இருந்திருந்தால் இந்திய அணி கட்டாயம் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்திருக்க முடியும். ஆனால் அவரது இழப்பு அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.