2024 ஐபிஎல் தொடர் தொடங்கிய சில நாளில் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸி தோனிக்கு வயதாகிவிட்டது, எனவே அவர் விக்கெட்டில் வேகமாக ஓட முடியாது, எனவே கடைசியில் வந்து பேட்டிங் செய்ய, அவர் வேகப்பந்து வீச்சில் சிக்ஸர்கள் அடிக்க மட்டுமே பயிற்சி செய்கிறார் என்று கூறியிருந்தார்.
மேலும் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் சிஎஸ்கே அணிக்காக தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வரவில்லை. குஜராத் அணிக்கு எதிராக வாய்ப்பு இருந்த பொழுதிலும் அங்கு சமீர் ரிஸ்வி அனுப்பப்பட்டார். எனவே தோனி இனி பேட்டிங் செய்ய வரமாட்டார் என்றே ரசிகர்கள் நினைத்தார்கள்.
இந்த நிலையில் நேற்று டெல்லி அணிக்கு எதிராக வந்து 16 பந்துகளில் 3 அபாரமான சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் அடித்து, தான் பினிஷிங் ரோலில் பேட்டிங்கில் யார் என்பதை கிரிக்கெட் உலகத்திற்கு மீண்டும் ஒருமுறை தோனி நிரூபித்திருக்கிறார். நேற்று அவர் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு பந்துகள் மைதானத்தில் தெறித்தன. அவருடைய பவர் ஹிட்டிங் எபிலிட்டி வயதானாலும் கொஞ்சம் கூட குறையவே இல்லை என்று தெரிந்தது.
இப்படி அவர் சிறப்பாக விளையாடிவிட்ட காரணத்தினால், ரசிகர்கள் மட்டுமில்லது உலகின் பல முன்னாள் வீரர்களும், தோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து விளையாட வேண்டும் என்று தங்கள் கருத்துகளை முன் வைத்து வருகிறார்கள். ஆனால் அவர் பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாம் இடத்தில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் கிளார்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் கருத்து கூறியிருக்கிறார்கள்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறும் பொழுது ” தோனி பேட்டிங் ஆர்டரில் மேலே வருவார் என நான் நினைக்கவில்லை. ஆட்டத்தில் மேலே வருகின்ற தேவை எங்காவது இருந்தால் மட்டுமே அவர் மேலே அனுப்பி வைக்கப்படுவார். ஏனென்றால் இதுதான் சிஎஸ்கே அணிக்கு சிறந்ததாக இருக்கும். மேலும் அவராலும் இதை செய்ய முடியும். அவர் பந்தை நன்றாக அடிக்கின்ற காரணத்தினால் ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் வருவார் என்று நினைக்க வேண்டாம். தோனி ஒரு சிறந்த மேதை. நான் பார்த்ததில் அவர் சிறந்த ஃபினிஷர். எனவே சிஎஸ்கே இந்த இடத்தில்தான் அவரை பயன்படுத்தும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ஜெயிச்சது நாங்க ஆனா நடந்தது வேற.. தோனி பாய் ஒவ்வொரு முறையும் சொல்றது இதுதான் – பிரித்வி ஷா பேட்டி
மேலும் தோனி பேட்டிங் ஆர்டர் பற்றி பேசியுள்ள ஸ்டீவ் ஸ்மித் கூறும் பொழுது “தோனி பேட்டிங் ஆர்டரில் மேலே வர வேண்டும். இன்று அவர் பேட்டின் நடுப்பகுதியில்தான் எல்லா பந்துகளையும் அடித்தார். ஆனால் இப்படி பேட்டின் நடுப்பகுதியில் அடிப்பதற்கு மறுமுனையில் இருந்த ஜடேஜா நீண்ட நேரமாக தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனால் தோனி வந்தவுடன் பேட்டில் மிடில் செய்தார். இது பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. தோனி பேட்டிங் ஆர்டரில் மேலே வருவதையும் இன்று செய்தது போல தொடர்ந்து செய்யவும் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.