ஐசிஎல் தொடரில் ஆடிய முக்கியமான ஆறு வெளிநாட்டு வீரர்கள்

0
1329
Brian Lara ICL

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் வெற்றியைப் பற்றி புதிதாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சின்னஞ்சிறு நாடுகள் கூட தங்கள் நாட்டுக்கென்று பிரிமீயர் லீக் தொடர் நடத்துகிறார்கள் என்றால் அதற்கு ஐபிஎல்-ன் வெற்றி தான் முக்கிய காரணம். ஆனால் ஐபிஎல் என்று ஒரு தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவில் ஐசிஎல் என்று ஒரு தொடர் நடந்தது. சொல்லப் போனால் ஐபிஎல் தொடரே இந்த ஐசிஎல்-ஐ பார்த்து வந்தது தான். இந்த ஐசிஎல் இரண்டு ஃபார்மட்டாக நடந்தது. ஒன்பது உள்ளூர் அணிகள் இணைந்து டி20 தொடரில் ஆடின. அதே போல நான்கு அணிகள் இணைந்து 50 ஓவர் தொடரில் ஆடினர்.

அகமதாபாத், சென்னை, டெல்லி, சந்திரர், தாக்கா, ஐதராபாத், மும்பை, பெங்கால், லாகூர் என்ற ஒன்பது அணிகள் டி20 தொடரில் பங்கு பெற்றன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஐசிஎல் உலக லெவன் என நான்கு அணிகள் 50 ஓவர் தொடரில் மோதிக்கொண்டன. இந்திய நாட்டைச் சேர்ந்த அம்பாத்தி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, தீப்தாஸ் குப்தா போன்ற வீரர்கள் எல்லாம் இந்தத் தொடரில் பங்கு பெற்றனர். மேலும் கிரண் மூர் மற்றும் கபில் தேவ் போன்ற சீனியர் வீரர்கள் அணிகளில் விளையாடாவிட்டாலும், இந்தத் தொடரின் ஒரு அங்கமாக தங்களை இணைத்துக் கொண்டனர். இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்தத் தொடர் பல சர்ச்சைகளை சந்தித்ததோடு மட்டுமல்லாது ஐபிஎல் தொடரின் வளர்ச்சியால் நின்று போனது.

- Advertisement -

இந்திய வீரர்கள் என்று மட்டுமல்லாது, பல வெளிநாட்டு வீரர்களும் இந்தத் தொடரில் ஆடினர். உலகமே வியந்து பார்த்த பல ஜாம்பவான்களை எல்லாம் இந்தத் தொடரில் ஆட அழைத்து வந்தது ஐசிஎல். அப்படி ஐசிஎல் தொடரில் ஆடிய முக்கியமான ஆறு வெளிநாட்டு வீரர்களைக் காண்போம்.

1. பிரையன் லாரா

மேற்கிந்தியத் தீவுகளின் அணியின் ஜாம்பவான் பிரயன் லாரா இந்தத் தொடரில் மும்பை அணிக்காக ஆடினார். உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களை எல்லாம் பதம் பார்த்த லாராவுக்கு இந்தத் தொடர் அவ்வளவு வெற்றிகரமாக அமையவில்லை. ஆறு போட்டிகளில் பங்கேற்று 31 ரன்கள் தான் எடுத்தார். ஒரு போட்டியில் அதிக பட்சமாக 15 ரன்கள் எடுத்தார்.

2. இயன் ஹார்வி

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹார்வி சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் மற்றும் உலக 11 அணிக்காக ஆடினார். மொத்தம் 28 போட்டிகள் ஐசிஎல் தொடரில் ஆடினார் ஹார்வி. 735 ரன்கள் இந்தத் தொடரில் அவர் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார். ஒரு ஆட்டத்தில் அதிக பட்சமாக 63 ரன்கள் எடுத்தார் இயன் ஹார்வி.

- Advertisement -

3. மார்வன் அட்டப்பட்டு

Marvan Atapattu Cricket

இலங்கை அணியின் சீனியர் பேட்டிங் வீரர் அட்டப்பட்டு இந்தத் தொடரில் மூன்று அணிகளுக்காக ஆடினார். டெல்லி ஜெயன்ட்ஸ், டெல்லி ஜெட்ஸ் என்று இரண்டு அணிகளுக்கு 20 ஓவர்கள் தொடர்களிலும் உலக 11 அணிக்காக 50 ஓவர் தொடரிலும் ஆடினார் மார்வன் அட்டப்பட்டு. மூன்று அணிகளுக்கும் சேர்த்து 26 ஆட்டங்கள் ஆடி 459 ரன்கள். எடுத்துள்ளார் அட்டப்பட்டு. ஒரு ஆட்டத்தில் இவர் அடித்த அதிக பட்ச ஸ்கோர் 75*.

4. லான்ஸ் க்ளூஸ்னர்

1999 உலகக்கோப்பையில் தனது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய க்ளூஸ்னர் இந்தத் தொடரில் பெருத்த எதிர்பார்ப்புடன் கலந்து கொண்டு ஆடினார். இவரும் பெங்கால் டைகர்ஸ், கொல்கத்தா டைகர்ஸ் மற்றும் உலக 11 என்று மூன்று அணிகளுக்கு ஆடினார். 28 ஆட்டங்களில் 688 ரன்கள் மற்றும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

5. நாதன் ஆஸ்டில்

நியூசிலாந்து அணியின் நடசத்திர பேட்டிங் வீரர் நாதன் ஆஸ்டிலும் லாராவுடன் இணைந்து மும்பை அணிக்கு ஆடினார். ஆனால் லாராவைப் போன்றே அவராலும் ஜொலிக்க முடியவில்லை. ஐந்து ஆட்டங்களில் 81 ரன்கள் மட்டுமே எடுத்தார். லாரா, ஆஸ்டில் போன்ற வீரர்கள் இருந்தாலும் மும்பை அணி கடைசி இடத்தில் தான் தொடரை முடித்தது.

6. டேமியன் மார்டின்

ஆஸ்திரேலிய அணியின் மார்டின் ஐசிஎல் தொடரில் அகமதாபாத் மற்றும் உலக 11 அணிகளுக்காக ஆடினார். 25 ஆட்டங்களில் 443 ரன்கள் எடுத்து தொடரை முடித்தார் மார்டின். ஒரு ஆட்டத்தில் இவரின் அதிக பட்ச ஸ்கோர் 67*.