உம்ரான் மாலிக்கை இந்திய டெஸ்ட் அணியில் மட்டுமே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் – காரணத்தை விளக்கும் மொஹமத் அசாருதீன்

0
68

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் காஷ்மீரைச் சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் மிக அற்புதமாக விளையாடி வருகிறார்.14 போட்டிகளில் விளையாடி இதுவரை இருபத்தி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றுகிறார் இவருடைய பந்துவீச்சு எக்கானமி 9.03 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 13.57 ஆக உள்ளது.

அனைவரும் கூடிய விரைவில் விரைந்து அணிகள் இடம் பிடிக்கப் போகிறார் என்று கருத்து தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர். அவை அனைத்தும் உண்மையகும்படி வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கின்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் அணியில் அவர் விளையாட வேண்டும்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் அனைவரும் எதிர்பார்த்தபடி மாலிக் தற்போது இந்திய அணியின் டி20 போட்டிகளில் விளையாட போகிறார். ஆனால் என்னை பொறுத்த வரையில் அவர் டெஸ்ட் போட்டிகளில் நிறைய விளையாட வேண்டும்.

இது சம்பந்தமாக தன்னுடைய டுவிட்டர் கணக்கில் முகமது அசாருதீன் ஒரு ட்வீட் செய்துள்ளார். “உம்ரான் மெயில்க் டெஸ்ட் அணியில் இடம் பெற தகுதியானவர். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது, அவ்வாறு செய்யத் தவறினால் அவருக்கு காயங்கள் ஏற்பட நிறைய வாய்ப்பு உள்ளது. ஒரு எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு தேவைப்படும் ஆதரவு அவருக்கு வழங்கப்படும் என நம்புகிறேன்”, என்று அவர் குறிப்பிட்டு கூறியிருந்தார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர் வருகிற ஜூன் 9ஆம் தேதி துவங்கி ஜூன் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகள் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.