W,W,W.. இம்பேக்ட் பிளேயர்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை.. மும்பைக்கு நடந்த சோகம்

0
717
IPL2024

நடப்பு 17வது ஐபிஎல் சீசனில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் முதல் போட்டி இதுவாகும்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். இந்த மைதானத்தில் இந்த சீசனில் முதல் போட்டி என்கின்ற காரணத்தினால், ஆடுகளம் எப்படி இருக்கும் என்று தெரியாததால் முதலில் பந்து வீச விரும்புவதாக தெரிவித்தார்.

- Advertisement -

இது போலவே ஹர்திக் பாண்டியாவும் தாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்து வீசவே முடிவு செய்திருப்போம் என்று கூறியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் சந்திப் சர்மா காயத்தின் காரணமாக இடம் பெறவில்லை. அவருடைய இடத்தில் நேரடியாக பிளேயிங் லெவலில் பர்கர் இடம் பெற்றார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் சாம்ஸ் முலானி இடத்தில் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மதுவால் விளையாடும் வாய்ப்பை பெற்றார். மற்றபடி கடந்த ஆட்டத்தில் விளையாடிய அணியே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய வர ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் நான்காவது பந்தில் இஷான் கிஷான் சிங்கிள் எடுத்தார். ஐந்தாவது பந்தில் ரோஹித் சர்மாவை ட்ரெண்ட் போல்ட் சஞ்சு சாம்சன் அபார கேட்ச்சின் மூலம் வெளியேற்றினார். இதற்கு அடுத்த பந்தில் இளம் வீரர் நமன் திர்ரை எல்பிடபிள்யு மூலம் வெளியே அனுப்பினார். இதற்கு அடுத்து இம்பேக்ட் பிளேயராக போட்டியின் முதல் ஓவரின் முடிவிலேயே டிவால்ட் பிரிவியஸ் வந்தார். ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் முதல் ஓவரிலேயே வருவது இதுதான் முதல் முறை.

- Advertisement -

இதையும் படிங்க : 19 வருஷத்துக்கு முன்ன தோனி ஒரு சம்பவம் பண்ணார்.. நான் அப்ப அங்கதான் இருந்தேன் – முகமது கைஃப் சுவாரசிய பேச்சு

இதற்கு அடுத்து மீண்டும் மூன்றாவது ஓவருக்கு வந்த போல்ட் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் இம்பேக்ட் பிளேயர் டிவால்ட் பிரிவியஸை வெளியே அனுப்பினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் இல்லாமல் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மைதானத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய சோகமான விஷயம் நடந்திருக்கிறது.