எங்கள் வெற்றிக்கு இதுதான் காரணம் – பாபர் மற்றும் ரிஸ்வான் கருத்துக்கள்!

0
5902
Pakistan

இன்று ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தங்களுக்குள் மோதிக்கொண்ட போட்டி நடந்து முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் முதலில் வென்று பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிச்சம் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் 152 ரன்கள் சேர்த்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பாபர் மற்றும் ரிஸ்வான் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்து தந்தார்கள். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து ஆட்டம் இழக்க, பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது!

இந்த போட்டியில் அணியின் வெற்றியை ஏறக்குறைய உறுதி செய்யும் வரை களத்தில் நின்ற முகமது ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகின் நான்கு ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் மட்டுமே தந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

வெற்றிக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் ” கடந்த மூன்று போட்டிகளாக அணி சிறந்த வழியில் செயல்பட்டது. மைதானத்திற்கு நிரம்ப வந்து எங்களை உற்சாகப்படுத்தும் கூட்டத்திற்கு நன்றி. இதனால் நாங்கள் எங்களது சொந்த நாட்டில் விளையாடுவது போல் உள்ளது. முதல் ஆறு ஓவர்களில் நாங்கள் நல்ல துவக்கத்தைப் பெற்றோம். மேலும் எங்களிடம் நல்ல சுழல் தாக்குதல் இருந்தது. வேகப்பந்துவீச்சாளர்களும் தங்களின் வேலையை சரியாக செய்து முடித்தார்கள். நாங்கள் பேட்டிங் செய்வதற்கு உள்ளே செல்வதற்கு முன் முதல் ஆறு ஓவர்களை பயன்படுத்துவதாக திட்டம் வைத்திருந்தோம். இதனால் பின்பு வரக்கூடியவர்கள் எளிதாக விளையாட முடியும். முகமது ஹாரிஸ் ஒரு இளைஞர் அவரது ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை காட்டுகிறார். இந்த வெற்றியை இந்த தருணத்தை நாங்கள் அனுபவிப்போம் ஆனால் எங்கள் கவனம் இறுதிப் போட்டியில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருது பெற்ற முகமது ரிஸ்வான் கூறும்பொழுது ” நானும் பாபரும் புதிய பந்தில் ரன்கள் சேர்ப்பது என்று முடிவு செய்தோம் ஏனென்றால் விளையாடுவதற்கு ஆடுகளம் கடினமாக இருந்தது. நாங்கள் இருவரும் நல்ல முறையில் பவர் பிளேவை முடித்தோம். நாங்கள் எங்களுக்குள் யாராவது ஒருவர் நிலைத்து நின்று ஆட்டத்தை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எங்கள் அணி வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். நாங்கள் எப்பொழுதும் நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்!