என்னைப் பொறுத்தவரை தற்போதைய உலகின் தலைசிறந்த 3 வேகப்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் – கேப்டன் விராட் கோலி புகழாரம்

0
2469
Virat Kohli

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில மணி நேரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது.போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 327 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணியால் 174 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

130 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி 174 ரன்கள் குவித்து, வெற்றி இலக்காக 305 ரன்களை தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்திய அணி நிர்ணயித்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழக்க, இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

இதன் மூலமாக இந்திய அணி முதல் முறையாக செஞ்சூரியன் மைதானத்தில் டெஸ்ட் வெற்றியை ருசி பார்த்துள்ளது. அதே சமயம் இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்கிற கணக்கில் தற்பொழுது முன்னிலை வகிக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் கலக்கிய முகமது ஷமி

இந்திய அணி பந்து வீச்சாளர்கள் மத்தியில் முதல் இன்னிங்சில் முகமது ஷமி 16 ஓவர்கள் வீசி 44 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் (மார்க்ரம், பெட்டர்சன், பவுமா, முல்டர் மற்றும் ரபாடா ஆகியோர்களின் விக்கெட்டுகள்) கைப்பற்றி அசத்தினார். இதில் 5 ஓவர்கள் அவர் மெய்டன் ஓவர்களாக வீசியதும் குறிப்பிடத்தக்கது.

முதல் இன்னிங்சை போலவே இரண்டாவது இன்னிங்சிலும் ஷமியின் வேகம் துளி கூட குறையவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 17 ஓவர்கள் வீசி 63 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை ( மார்க்ரம், முல்டர் மற்றும் மார்கோ ஜென்சன் ஆகியோரின் விக்கெட்டுகள்) கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

முகமது ஷமியை வெகுவாக பாராட்டிய கேப்டன் விராட் கோலி

இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் கைகொடுத்து உள்ளதாக கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். அதிலும் குறிப்பாக முகமது ஷமி தலைசிறந்த பந்து வீச்சாளர். தற்பொழுதுள்ள உலகின் தலைசிறந்த 3 வேகப்பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர் என்று பெருமையாக கூறியுள்ளார்.

அவருடைய வலுவான மணிக்கட்டு அவருடைய பந்துவீச்சை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. நல்ல வேகத்தில் மட்டுமல்லாமல் சிறப்பான லைன் மற்றும் சீம் பொசிஷனில் தொடர்ச்சியாக அதேசமயம் சிறப்பாக சிறப்பாக அவர் பந்து வீசி வருகிறார். என்னைப் பொறுத்தவரை உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் அவர்(ஷமி) என்று கோலி தன் உரையை முடித்தார்.