சொந்தநாடு பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகப் போட்டியில் ஐந்து விக்கெட் ; தந்தை ஆனந்த கண்ணீர்!

0
717
Ahamed

இங்கிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பென் ஸ்டோக்ஸ் தலைமையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது!

இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி மிக அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது!

- Advertisement -

இதையடுத்து இந்த தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்று பாகிஸ்தான அணி முதலில் பேட் செய்தது!

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 216 ரன்களையும் எடுத்தது. பாகிஸ்தானின் இரண்டு இன்னிங்ஸிலும் கேப்டன் பாபர் அரைசதம் அடித்தார். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஹாரி புரூக்ஸ் சதத்தின் உதவியோடு 354 ரன்கள் எடுத்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ரேகன் அகமத் என்ற 18 வயது இளைஞரை இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகப்படுத்தியது. அவர் தனது முதல் இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அறிமுகப் போட்டியில் அசத்தியிருக்கிறார். மகனின் இந்த முதல் போட்டி விளையாட்டை காண மைதானத்திற்கு வந்திருந்த அவரது தந்தை மகன் ஐந்து விக்கெட் எடுத்து அசத்தியதை கண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டது நெகழ்ச்சியாக அமைந்தது. இதற்கான காணொளி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வொய்ட் வாஷ் செய்வது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது!