இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி ; வலுவான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்!

0
933
ICT

இந்திய அணி உள்நாட்டில் இலங்கை அணி உடன் தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் விளையாட இருக்கிறது!

முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட, பதினாறு வீரர்களை உள்ளடக்கிய அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாகவும் சூரியகுமார் யாதவை துணை கேப்டனாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்திருக்கிறது!

இந்தத் தொடரில் முதல் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மாலை துவங்க இருக்கிறது. இந்த கட்டுரைத் தொகுப்பில் நாளை நடைபெற இருக்கும் போட்டிக்கான உத்தேச வலுவான இந்திய பிளேயிங் லெவனை பார்ப்போம்!

துவக்க ஆட்டக்காரர்கள்:
ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக துவக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் இளம் வீரர் ருத்ராஜ் இந்த முறை துவக்க வீரராக வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அடுத்து இவருடன் இன்னொரு துவக்க ஆட்டக்காரராக பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்த இஷான் கிஷான் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் இடது வலது பேட்டிங் காம்பினேஷனை தருவார்கள்!

நடுவரிசை ஆட்டக்காரர்கள் :
சூரியகுமார் யாதவ் இந்த முறை மூன்றாவது ஆட்டக்காரராகவும், அடுத்து தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இடம் பெற வாய்ப்புகள் அதிகம்!

ஆல்ரவுண்டர்கள் :

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தரும் இடம்பெறுவது ஏறக்குறைய உறுதி!

சுழற் பந்துவீச்சாளர்:
இந்த இடத்தில் அணியில் இடம் பெற்றுள்ள மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் சாகல் இடம் பெறவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது!

வேகப்பந்து வீச்சாளர்கள் ;
பேட்டிங்கில் ஓரளவுக்கு பங்களிப்பு செய்யக்கூடிய மிதவேகப் பந்துவீச்சாளர் ஹர்சல் படேல், இளம் இடது கை ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் மற்றும் அதிவேக பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெறுவார்கள்!

16 பேர் கொண்ட அணியில் இவர்கள் அல்லாது வெளியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சிவம் மாவி, முகேஷ் குமார் மற்றும் பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி, கில், மற்றும் சுழற் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இருப்பார்கள்!