தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிட்டு பேசிய விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்த சவுரவ் கங்குலி

0
86

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இறுதி நேரத்தில் கிடைத்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றிருந்தால் நான்காவது அணியாக டெல்லி அணி உள்ளே நுழைந்து இருக்கும்.

ஆனால் அப்போட்டியில் டெல்லி அணி தோல்வி பெற்றதால் லீக் தொடரில் இருந்து வெளியேறிவிட்டது. இது ஒருபுறமிருக்க டெல்லி அணியை வழிநடத்தி வரும் ரிஷப் பண்ட் சரியாக கேப்டன்ஷிப் பொறுப்பை செய்யவில்லை என்று கருத்துக்களை ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் முன்வைக்கின்றனர். மேலும் அவரை மகேந்திரசிங் தோனியுடன் ஒப்பிட்டும் பேசியுள்ளனர்.

- Advertisement -

முதலில் நீங்கள் அவரை எம்எஸ் தோனியுடன் ஒப்பிடுவது தவறு

ரிஷப் பண்ட் சம்பந்தமாக எழுந்த கருத்துக்களை கவனித்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி ஒரு சில விஷயங்களை கூறியுள்ளார்.”ஐபிஎல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என எம்எஸ் தோனி கிட்டத்தட்ட 500 போட்டிகளுக்கு மேல் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடி இருக்கிறார். மறுபக்கம் ரிஷப் பண்ட் தற்போதுதான் படிப்படியாக வளர்ந்து வருகிறார்.இதில் நீங்கள் எம்எஸ் தோனி உடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது மிகவும் தவறான விஷயம் என்று சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் குறித்து எழுந்த கருத்துக்கள்

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகளில் ரிஷப் பண்ட் ஆரம்பத்தில் சற்று அதிரடியாக விளையாடி அதன் பின்னர் அவுட்டாகுவதை வழக்கமாக வைத்திருந்தார். எந்த ஒரு போட்டியிலும் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவர் விளையாடவில்லை. 151 ஸ்ட்ரைக் ரேட் விதத்தில் அவர் விளையாடி இருந்தாலும் இந்த நடப்பு தொடரில் அவர் 340 ரன்கள் மட்டுமே குவித்திருக்கிறார்.

அதேபோல கேப்டன்ஷிப் விஷயத்திலும் ஒரு சில தவறுகளை அவர் செய்திருக்கிறார். டெல்லி அணியில் சிறந்த ஃபார்மில் இருக்கும் குல்தீப் யாதவுக்கு ஒரு சில போட்டிகளில் நான்கு ஓவர் முழுவதுமாக வீச வாய்ப்பு வழங்கவில்லை. இவ்வாறு பல கருத்துக்கள் எம்எஸ் தோனி உடன் ஒப்பிட்டு அவர் சம்பந்தமாக எழுந்தன. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கங்குலி அவ்வாறு நேற்று பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வருகிற ஜூன் 9ஆம் தேதி துவங்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.