“பைனல் அவசியம் இல்ல.. இந்தியாவுக்கு உலக கோப்பையை குடுத்துடுங்க !” – ஆஸி பிராட் ஹாக் பரபரப்பான பேச்சு!

0
56873
Hogg

நடந்து கொண்டிருக்கும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இந்தியா எந்த வகையில் வெற்றிகரமாக நடத்தும்? என்கின்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது.

ஏனென்றால் இந்தியாவில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் பல இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டது.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் டி20 கிரிக்கெட்டுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய எழுச்சி, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மைதானத்திற்கு ரசிகர்களை கொண்டு வருமா? என்கின்ற பலத்த சந்தேகம் நிலவியது.

இதற்கு ஏற்றார்போல் நடப்பு உலகக் கோப்பையில் நியூசிலாந்து இங்கிலாந்து மோதிக்கொண்ட துவக்க போட்டியில் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாக தெரிந்தது.

ஆனால் அந்தப் போட்டிக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்ததாகவும், உலகின் மிகப்பெரிய மைதானம் என்பதால் பல இருக்கைகள் காலியாக தெரிந்தன என்கின்ற உண்மை கூறப்பட்டது. இதை பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே ஏற்றுக் கொண்டார்கள்.

- Advertisement -

மேலும் இந்தியா விளையாடாத போட்டிக்கும் மைதானங்கள் நிரம்பும் காட்சிகளை பார்க்க முடிந்தது. சிறிய அணிகளான நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் மிகச் சிறந்த போட்டியை இந்த தொடரில் வெளிப்படுத்தி ரசிகர்களை எதிர்த்தார்கள். இதன் காரணமாக எந்த உலகக் கோப்பையை விடவும் இந்த உலகக் கோப்பை மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அணியான இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகி வருகிறது. விளையாடிய எட்டு போட்டிகளிலும் அனாயசமாக எதிரணிகளை பந்தாடியிருக்கிறது.

இந்தியா அணிக்கு போட்டி அணியாக தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே இருக்கும் என்று கணித்திருந்த வேளையில், நேற்று அந்த அணியை 83 ரன்களில் சுருட்டி வீசியது. இதனால் பல அணிகளும் இந்திய அணியை பார்த்து விளையாட பயப்படுகின்றன.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் கூறும்போது ” நேற்று இரவு நடந்ததை பார்க்கும் பொழுது இறுதிப் போட்டியை தேவையில்லை என்பது போல இருக்கிறது. இறுதிப் போட்டி நடத்தினால் அந்தப் போட்டியில் இந்திய அணியுடன் உலக அணியைத்தான் விளையாட வைக்க வேண்டும். அந்த அளவிற்கு இந்திய அணி பலமாக இருக்கிறது!” என்று பாராட்டி கூறியிருக்கிறார்!