இந்திய கிரிக்கெட் ஆண் வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகளுக்கும் சம்பளம்; சச்சின் வாழ்த்து!

0
457
Sachin

கிரிக்கெட் என்பது ஒரு காலத்தில் அதிகார வர்க்கம் விளையாடும் ஒரு விளையாட்டாக இருந்து, பின்பு அது பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டாக கொஞ்சம் மாறியது.

கிரிக்கெட் உருவாகிய இடம் இங்கிலாந்து என்பதால், இங்கிலாந்து முந்தைய காலங்களில் தாங்கள் ஆட்சி செய்த நாடுகளில் கிரிக்கெட் மெல்ல பரவ ஆரம்பித்தது.

- Advertisement -

இந்த வகையில் கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சாமானிய மக்களின் விளையாட்டாக மாறியது. பின்பு சாமானிய மக்கள் தங்கள் நாட்டுக்காகவும் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நிலை உருவானது.

ஆண்கள் கிரிக்கெட்டில் கோலோச்ச பின்பு பெண்களும் கிரிக்கெட்டுக்குள் வர ஆரம்பித்தார்கள். ஆனால் பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு கிடையாது. பின்பு காலம் மாற மாற பெண்கள் கிரிக்கெட்டில் வேகமும் விறுவிறுப்பும் சுவாரசியமும் அவர்களின் திறமை மேம்பாட்டால் அதிகரித்தது.

இதை அடுத்து பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு மிக முக்கியமான நிலைப்பாட்டை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்தது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆண்களுக்கு ஒரு போட்டிக்கு தரும் சம்பளத்தை பெண்களுக்கும் தருவதாக அறிவித்து செயல்படுத்தியது. இதற்கு அடுத்து தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டு முறைக்கு வந்திருக்கிறது.

- Advertisement -

பிசிசிஐ-ன் இது பற்றிய அறிவிப்பில்
” பெண்கள் கிரிக்கெட்டில் ஆண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் வழங்கப்படும். ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒரு ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சம், ஒரு டி20 போட்டிக்கு 3 லட்சம் என சமமாக வழங்கப்படும். இது பெண்கள் தங்கள் விளையாட்டில் காட்டும் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்கானது. இந்த திட்டத்தை அமல்படுத்த வழிகாட்டிய அபெக்ஸ் குழுவுக்கு நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின் அதில் “கிரிக்கெட்டில் பல விஷயங்கள் சமன் ஆகி இருக்கிறது. கிரிக்கெட்டில் பாலின சமத்துவம் மற்றும் விளையாட்டில் இருக்கும் பாகுபாடுகளை துடைக்க இது வரவேற்கத்தக்க ஒரு படி நிலையாகும். பிசிசிஐ எடுத்த இந்த முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முடிவு பெண்கள் கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்லும் புத்திசாலித்தனமானது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Female players are paid at par with male Indian cricketers; Congratulations Sachin!]