ஒரே போட்டியில் தந்தை மகன் என இருவரும் இணைந்து விளையாடிய கிரிக்கெட் போட்டிகள்

0
1260
Shivnarine Chanderpaul Son

கிரிக்கெட்டில் எப்பொழுதும் ஒரு வேடிக்கையான சம்பவம் நடைபெறும். அண்ணன் தம்பி என இருவரும் ஒரே அணியில் அல்லது இருவரும் வேறு அணிகளில் ஒரேசமயம் விளையாடுவார்கள்.

ஆனால் தந்தை மகன் என இருவரும் இணைந்து ஒரே போட்டியில் விளையாடிய செய்திகளை நாம் அவ்வளவாக அறிந்திருக்க மாட்டோம். அப்படி தந்தை மகன் என இருவரும் ஒரே போட்டியில் இணைந்து விளையாடிய கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

லாலா அமர்நாத் – சுரீந்தர் அமர்நாத்

லாலா அமர்நாத் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆரம்ப காலகட்டத்தில் விளையாடிய ஒரு வீரர். 1933 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட ஆரம்பித்தார். அதன்பின்னர் மொத்தமாக 24 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

இவருடைய மகன் சுரேந்தர் அமர்நாத் இந்திய அணிக்காக அதன்பின்னர் விளையாட தொடங்கினார். 1963 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து ஒரு போட்டியில் விளையாடினார்கள். சுரேந்தர் அமர்நாத் மொத்தமாக இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு தொண்டு நிறுவனத்திற்காக விளையாடினார்கள். அந்த போட்டி மும்பையில் நடைபெற்றது. அந்த போட்டியில் விளையாடியபோது லாலா அமர்நாத்துக்கு 52 வயது அவருடைய மகன் சுரீந்தருக்கு 15 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிவ்நரேன் சந்தர்பால் – டாகெனரைன் சந்தர்பால்

வெஸ்ட்இண்டீஸ் அணிக்காக விளையாடிய ஜாம்பவான் வீரரான சிவ்நரேன் சந்தர்பால் விளையாடுவதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மிக ஆர்வமாக பார்ப்பார்கள். அவரது ஆட்டம் மட்டுமின்றி அவர் நிற்கும் ஸ்டைலும் மிக அற்புதமாக இருக்கும். 2015ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக மிக அற்புதமாக இவர் விளையாடியது குறிப்பிடத்தக்கது.மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரரும் இவரே.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் வாழ்க்கையை இவர் ஒரேடியாக முடித்துக் கொள்ளவில்லை. பின்னர் மீண்டும் உள்ளூர் ஆட்டங்களில் இவர் விளையாட தொடங்கினார். அப்படி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது 2017ம் ஆண்டு இவர் அணியில் இவருடைய மகன் சிவ்நரேன் சந்தர்பால் இவருடன் இணைந்து விளையாடினார். அந்த போட்டியில் இவர்கள் இருவரும் இணைந்து 256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததும் குறிப்பிடத்தக்கது.

வில்லி காய்ஃப் – பெர்னார்ட் காய்ஃப்

இங்கிலாந்து அணியில் விளையாடிய வெள்ளி இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவருடைய மகன் பஸ்ட் கிளாஸ் போட்டிகளில் மிக அற்புதமாக விளையாடுபவர். குறிப்பாக அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கண்டிரி கிரிக்கெட் தொடரில் வார்விக்ஷிரே அணைக்காக 20 முறை விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெனிஸ் ஸ்ட்ரீக் – ஹீத் ஸ்ட்ரீக்

டெனிஸ் ஜிம்பாபே அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆரம்ப காலத்தில் விளையாடி இருக்கிறார். அவருடைய மகன் ஹீத் ஜிம்பாப்வே அணிக்காக மொத்தமாக 2000 ரன்கள் குவித்து மேலும் 216 விக்கெட்டுகளை கைபற்றி இருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து பஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் கண் – ஜார்ஜ் வேர்னன் கன்

1931ஆம் ஆண்டு இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் நோட்டிங்கம்ஷிரே அணிக்காக ஜார்ஜ் வேர்னன் கன் தனது முதல் சதத்தை குவித்தார். அந்தப் போட்டியில் ஒரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவருடைய தந்தை தனது 53-வது வயதில் 183 ரன்கள் குவித்தார். ஒரு போட்டியில் தந்தை மகன் இருவரும் இணைந்து இவ்வளவு ரன்கள் குவித்தது அதுவே முதல் முறை.

அதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து 34 போட்டிகளில் ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.