கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிவேகமாக பந்துகளை வீசிய 5 ஸ்பின் பவுலர்கள்

0
3160
Fastest Spinners

கிரிக்கெட் போட்டியில் நாம் எப்பொழுதும் எதிர்பார்த்தது போல் ஒரு சில போட்டிகள் அமையாது. எதிர்பாராத விஷயமாக ஒரு சில அதிசயங்களும் அற்புதங்களும் நடக்கும். ஒரே ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர் அடிப்பது, தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் வீரர்கள் அவுட்டாவது என ஒரு சில விஷயங்கள் எதிர்பாராத நேரத்தில் நடைபெறும்.

அப்படி பந்துவீச்சாளர்கள் மத்தியில் ஒரு சில சமயம் ஸ்பின் பவுலிங் போடும் வீரர்கள் மிக வேகமாக பந்துகளை வீசுவார்கள். ஒரு ஸ்பின் பவுலர் சராசரியாக 100 கிலோ மீட்டர் வேகத்துக்கு கீழ்தான் பந்து வீசுவார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாகப் பந்து வீசிய ஸ்பின் பந்து வீச்சாளர்களை பற்றி பார்ப்போம்

5. ஷதாப் கான்

Sadhabh Khan

பாகிஸ்தானை சேர்ந்த இவர் 2019ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது அதிவேக பந்தை வீசினார். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் மிக அற்புதமாக விளையாடிக்கொண்டிருந்தது.

ஜோ ரூட் மிக அற்புதமாக விளையாடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை கவலை கொள்ள வைத்தார். அப்பொழுது வந்து பந்துவீசிய ஷதாப் மிக அற்புதமாக பந்துவீசிய ஜோ ரூட் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் வீசிய அந்த பந்து 111 கிலோமீட்டர் வேகத்தில் வந்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

4. குருனால் பாண்டியா

2020 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக ஒரு சமயம் குருனால் பாண்டியா வந்து பந்து வீசினார். அப்பொழுது எதிர்முனையில் மார்க்கஸ் ஸ்டோயினிஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அவர் வீசிய அந்த பந்து வழக்கத்திற்கு மாறாக மிக வேகமாக வந்தது. சுமார் 112.5 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வந்தது. அந்த பந்தில் ஸ்டோயினிஸ் அவுட் ஆகவில்லை என்றாலும் அந்த போட்டியின் முடிவில் மும்பை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

3. பியூஸ் சாவ்லா – 117

Piyush Chawla Cricket

பியூஸ் சாவ்லா ஒரு சமயத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடி கொண்டிருந்தார். பஞ்சாப் அணியில் மிக அற்புதமாக விளையாடி ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை காண்பித்து வந்தார். ஒரு போட்டி பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்றது.

ராஜஸ்தான் அணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அதிரடி வீரர் ஷேன் வாட்சன், பஞ்சாப் அணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். அப்பொழுது பந்துவீச வந்த பியூஸ் சாவ்லா அற்புதமாக செயல்பட்டு ஷேன் வாட்சன் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் விக்கெட்டை கைப்பற்ற மிக வேகமாகவே பந்தை பியூஸ் சாவ்லா வீசினார், அதன் காரணமாக வாட்சன் எதிர்பாராதவிதமாக அவுட்டானார். அந்த பந்து 117 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வந்தது குறிப்பிடத்தக்கது.

2. அனில் கும்ப்ளே – 118

இந்தியாவில் விளையாடிய ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அனில் கும்பிலே எப்பொழுதும் இடம் பெறுவார். அந்த அளவுக்கு இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் மிக அற்புதமாக விளையாடி ஒரு வீரர்.

இங்கிலாந்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மார்க்கஸ் டிரஸ்கோதிக்கை மிக அற்புதமாக பந்துவீசி அவுட் ஆக்கினார். அவர் வீசிய அந்த பந்து வழக்கத்திற்கு மாறாக 118 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வந்தது. இது மட்டுமின்றி பல சமயங்களில் அனில் கும்ப்ளே மிக வேகமாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. ஷஹீத் ஆப்ரிடி – 134

பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய ஒரு தலைசிறந்த ஆல்ரவுண்டர் வீரர் அப்ரிடி. ஒரு சமயம் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே டி20 போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஒரு மிகப்பெரிய இலக்கை நியூசிலாந்து அணி நிர்ணயித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருந்த நியூசிலாந்து அனி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அப்ரிடி பந்து வீச வந்தார். அப்பொழுது அவர் வீசிய பந்து 134 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வந்தது.

இதன் மூலம் சர்வதேச அளவில் அதிவேகமான பந்தை வீசிய ஸ்பின் பந்து வீச்சாளர்கள் மத்தியில் ஷாகித் அப்ரிடி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.