ரமீஸ் ராஜாவின் அகங்கார பேச்சு.. புள்ளி விவரம் மூலம் பதிலடி தந்த ரசிகர்கள்

0
153

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. டி20 உலக கோப்பை நடைபெறும் ஆண்டுக்கு முன் ஆசிய கோப்பை தொடர வந்தால் 20 ஓவர் தொடராகவும், 50 உலகக் கோப்பை தொடர்க்கு முன்பு ஆசிய கோப்பை போட்டி வந்தால் ஒருநாள் தொடராகவும் நடத்தப்படும் என முன்பே திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு 50 ஒவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால், இந்த போட்டிக்கு ஒரு நல்ல பயிற்சி களமாக ஆசிய கிரிக்கெட் போட்டி 50 ஓவர் தொடராக வரும் ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த தொடரில் பங்கேற்க அரசின் அனுமதி இருந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு செல்வோம் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்தியா ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நாங்கள் அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்தியாவுக்கு வரமாட்டோம் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா, பாகிஸ்தான் அணி உலகக் கோப்பை விளையாடவில்லை என்றால் யார் அந்த போட்டியை பார்ப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார் .அதுடன் நிறுத்திக் கொள்ளாமல் இந்தியா போன்ற 6 ஆயிரம் கோடியில் ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் அணியை பாகிஸ்தான அணி இரண்டு முறை தோற்கடித்திருப்பதாக கூறியுள்ளார்.

இது ரசிகர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தக்க பதிலடி தந்துள்ள ரசிகர்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா , ஜிம்பாவே ஆகிய ஆட்டத்திற்கு 82,000 பேர் வந்தார்கள் என்றும் , ஆனால் பாகிஸ்தான் இங்கிலாந்து மோதிய இறுதி ஆட்டத்திற்கு வெறும் 80 ஆயிரம் பேரை வந்திருந்தார்கள் என்றும் புள்ளி விவரங்களோடு குறிப்பிட்டிருந்தனர். ஜிம்பாப்வே உடன் இந்தியா மோதினாலே அதிக ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பதால் பாகிஸ்தான் உலகக்கோப்பை க்கு வரவில்லை என்றாலும் எந்த நஷ்டமும் ஏற்படப்போவதில்லை என்று இந்திய ரசிகர்கள் பதிலடி தந்துள்ளனர்.