ரவிச்சந்திரன் அஷ்வினிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள் வைரலாகும் வீடியோ

0
177
Ashwin Valimai Update

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18ஆம் தேதி தொடங்கவிருந்தது. ஆனால் மழை குறிக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இருப்பினும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் ஆட்டம் சரியான நேரத்திற்கு தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், நியூசிலாந்து அணி அவர்களது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 101/2 என வலுவான நிலையில் உள்ளது.

சவுத்தாம்ப்டனில் வலிமை அப்டேட்:

இந்தியா–நியூசிலாந்து அணிகளின் போட்டிக்கு இடையே வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்று ரசிகர் ஒருவர் கேட்டது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.

எச். வினோத் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம்‘ வலிமை’. இதற்கான பூஜை 18.10.2019 ஆம் தேதி நடைபெற்றது. அதற்குப் பின்னர் இத்திரைப்படத்தைப் பற்றி எந்த ஒரு தகவல்களும் வெளியாகவில்லை. 600+ நாட்கள் ஆகியும் எந்த ஒரு அப்டேட்டும் வராததால ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

இறுதிப் போட்டியின் மூன்றாம் நாளான நேற்று, ரவிச்சந்திரன் அஸ்வின் மைதானதைச் சுற்றி ஓடிக்கொண்டு இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அஸ்வினை நோக்கி, “ஆஷ் அண்ணா வலிமை‌ அப்டேட் வேண்டும்” என்று கத்திக்கொண்டு இருந்தார்.

அதைக்கண்டு அஸ்வின் சிரித்துக்கொண்டே ஓடினார். நேற்று இரவு முதல் இந்த விடியோக் காட்சி டிவிட்டர், முகநூல் என அனைத்து சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

மொயின் அலியியடம் கேட்ட அப்டேட்:

இதேபோன்று, சேப்பாக்கத்தில் இந்தியா–இங்கிலாந்து இடையேயான நடந்த 2ஆவது டெஸ்டின் போதும் “மொயின் அலி பாய் வலிமை அப்டேட்” என ரசிகர்கள் கூவினர். ஆனால் மொயின் அலிக்கு ஏதும் விளங்கவில்லை. போட்டி இடைவேளையின் போது அஸ்வினிடம் இதைப்பற்றி கேட்டுள்ளார். அந்த நிகழ்வு அனைவராலும் பெரிதாக பேசப்பட்டது.

நடிகர் அஜித் மிகவும் எளிமை மற்றும் பண்பானவர். அவருக்கு இது போன்ற செயல்கள் சுத்தமாக பிபிடிக்காது. பொதுஇடங்களில் இதுபோன்று செயல்களை தவிருங்கள் என்று ஓர் அறிக்கையை பின்னர் வெளியிட்டார். ஆனால் ரசிகர்கள் யாவரும் அதை மதிக்கவில்லை என்பது இப்போது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் திரைப்படத்தின் அப்டேடை வெளியிடுவது நல்லது அல்ல எனக் கருதியே திரைப்படக்குழு அதைத் தல்லிப்போடுகிறது. ரசிகர்கள் அதைப் புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும் என்பதே தல ஆசையும். தற்போது தமிழகத்தில் தொற்றுக் குறைந்துள்ளதால், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.