நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா செய்த சம்பவம் அந்த அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் அவரையே தொடர்ந்து கேப்டனாக இருக்க வைப்பது நல்லது என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்தப் போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் வெல்லும் நிலையில் இருந்த டெல்லி அணி விக்கெட்டுகளை வேகமாக இழந்து 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் ரோகித் சர்மா களத்திற்கு வெளியில் இருந்து தந்த சில ஆலோசனைகள் மும்பை அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
ஏற்கனவே செய்து காட்டிய ரோகித் சர்மா
இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். அப்பொழுது இம்பேக்ட் பிளேயராக இருந்த ரோகித் சர்மா இடைவேளையின் போது மைதானத்திற்கு உள்ளே வந்தார். அவர் ஹர்திக் பாண்டியாவிடம் மெதுவான கட்டர் பந்துகளை தொடர்ந்து வீசும்படி கூறிவிட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து ஹர்திக் பாண்டியா அப்படியான பந்துகளை தொடர்ந்து வீசினார். இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் கிடைத்தது. மேலும் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இத்துடன் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றிய ஒரே கேப்டனாக ஹர்திக் பாண்டியா சாதனை படைத்தார். இதற்குப் பின்னால் ரோகித் சர்மா சூழ்நிலையை புரிந்து தந்த ஒரு ஆலோசனைதான் இருந்தது.
நேற்று மீண்டும் ரோகித் சர்மா சம்பவம்
இந்த நிலையில் நேற்று டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது கருண் நாயர் அதிரடியால் அந்த அணி வெல்லும் நிலையில் இருந்தது. இம்பேக்ட் பிளேயராக வெளியில் சென்று விட்ட ரோகித் சர்மா, அங்கிருந்தபடியே சுழல் பந்துவீச்சாளரை கொண்டு வரும்படி ஹர்திக் பாண்டியாவுக்கு கூறினார். இது வீடியோவில் தெள்ளத் தெளிவாக பதிவாகி இருக்கிறது. மேலும் சான்ட்னரையும் கொண்டு வருவதற்கு அவரே கூறினார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே-வில் ருதுராஜ் இடத்திற்கு புதிய வீரர் யார்?.. வெளியான தகவல்.. ஆனால் ரசிகர்கள் கவலை
இதைத் தொடர்ந்து உள்ளே வந்த கரண் சர்மா 3 மற்றும் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளை அதிரடியாக கைப்பற்ற மும்பை அணி பரபரப்பான போட்டியில் 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அடிக்கடி ஹர்திக் பாண்டியா ஆரம்பத்தில் இருந்து பயிற்சியாளரிடம் ஆலோசனைகள் கேட்டுக் கொண்டே இருந்தார். இன்னொரு பக்கத்தில் ரோகித் சர்மா சூழ்நிலையை கணித்து வெளியில் இருந்து அட்டகாசமான ஐடியாக்களை கொடுத்தார். இப்படி ஹர்திக் பாண்டியா செயல்படுவதற்கு பேசாமல் மீண்டும் ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பை தருவது சிறந்தது என மீண்டும் ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.






