காற்றில் விழுந்த பெயில்ஸ்; வெளியேறிய வீரர் – வினோத நிகழ்வு வீடியோ இணைப்பு!

0
667
Australia

கிரிக்கெட் மாதிரி விதிகள் மாற்றப்பட்டு மேலும் காலத்திற்கு ஏற்றார் போல் தகவமைந்து வரும் விளையாட்டு வேறு எதுவுமே கிடையாது என்று கூறலாம்!

நாள் கணக்கு இல்லாமல் இருந்த டெஸ்ட் கிரிக்கெட் ஐந்து நாளுக்கு வந்தது பிறகு 60 ஓவர் போட்டிகள் நடந்து அது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தற்பொழுது 20 ஓவர் வடிவத்தில் நடத்தப்படுவது எனக்கு கிரிக்கெட் மாறி கொண்டே இருக்கக்கூடியது!

- Advertisement -

கிரிக்கெட்டின் வடிவம் மட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் புகுத்தப்படும் விஷயங்களும் புதிதாக வந்து கொண்டே இருக்கும். புதிய புதிய விதிகளும் மாற்றப்பட்டு கொண்டே இருக்கும். சில வருடங்களுக்கு முன்பு இருந்த ஃபீல்டிங் விதி தற்பொழுது இருக்காது.

இந்த வகையில் ஒளிரும் பெயில்ஸ்கள் கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம் ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட்டை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும். ஆனால் அதே சமயத்தில் பெயில்ஸ் என்பது நகர்ந்து லைட் எரிந்தாலும், அது முற்றிலுமாக ஸ்டெம்பை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என்பதுதான் விதி!

நேற்று பங்களாதேஷ் இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது அபாடெட் உசைன் வீசிய பந்தில் ஸ்ரேயாஸ் கிளீன் போல்ட் ஆனார். ஆனால் பெயில்ஸ் ஸ்டம்பை விட்டு கீழே விழவில்லை. இதனால் அவர் அவுட் ஆபத்திலிருந்து தப்பித்தார்!

- Advertisement -

ஆனால் இதற்கு நேர் மாறாக ஆஸ்திரேலியா உள்நாட்டு டி20 தொடரான பிக்பேஷ் கிரிக்கெட் தொடரில் காற்றில் பெயில்ஸ் கீழே விழுந்து வீரர் ஒருவர் தவறுதலாக வெளியேற பின்பு நடுவர் தலையிட்டு கண்டுபிடித்து அவரை ஆட அனுமதித்த வினோத நிகழ்வு நடந்துள்ளது. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!