காலில் ரத்தம் வடிந்தாலும் கஷ்டமான கேட்ச்சை எளிதாக பிடித்த சென்னை வீரர்

0
109
Faf du Plessis

ஐபிஎல் தொடர் தற்போது மீண்டும் அமீரக மைதானங்களில் தொடங்கி விளையாடப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்பு இருந்தது. இதனால் வெற்றியை குறிக்கோளாக கொண்டு ஆடிய சென்னை அணி டாஸ் ஜெயிக்க தவறியதால் முதலில் பந்து வீச வேண்டியதாயிற்று.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் இணைந்து ஆரம்பத்தில் சில பவுண்டரிகளை அடித்தாலும் அம்பாதி ராயுடுவின் அருமையான த்ரோவினால் ரன் அவுட் ஆனார் கில். அதன்பிறகு வெங்கடேஷும் அவுட்டாக களத்திற்கு கேப்டன் மார்கன் வந்தார். இந்த தொடரில் பெரிதாக சாதிக்காத மார்கன் இந்த முறையாவது பெரிதாக சாதிப்பாரா என்பதை காண கொல்கத்தா அணி ரசிகர்கள் காத்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் மார்கன் ரன் சேர்க்க முடியாமல் திணறினார். ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற வித்யாசமான ஷாட்டுகளை எல்லாம் முயன்று பார்த்தும் அவரால் ரன் எதுவும் பெரிதாக அடிக்க முடியவில்லை. அதனால் கடைசியில் பேர்செண்ட் வீசிய பந்தில் இறங்கி வந்து லாங் லான் பக்கம் சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் அதை பவுண்டரி பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சென்னை அணியின் பில்டர் டூபிளசிஸ் சிறப்பாக பிடித்தார். ஒரு கட்டத்தில் பந்தை பவுண்டரிக்கு தவற விட்டு விடும் நிலை வந்தாலும் அதை அருமையாக கட்சியாக மாற்றினார் டுப்லஸ்ஸிஸ். இந்தக் கேட்ச்சை பிடிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் மற்றொரு கேட்சை பிடிக்க முயன்று அதை தவறவிட்டு ரத்த ககாயத்திற்கு ஆளானார்.

ஆனால் இந்த முறை ரத்தம் வடிந்து கொண்டு இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சிறப்பாக பாய்ந்து கேட்ச் பிடித்து கொல்கத்தா அணி வீரர் மார்கனை வெளியேற்றினார். டூப்ளஸிஸ் சென்னை அணிக்கு பல காலமாக துவக்க வீரராக இருந்தாலும் 100 ரன்களுக்கு மேல் ஒரு தொடரில் கூட அடித்தது கிடையாது. இந்த முறை இப்போதே 350க்கும் அதிகமான ரன்களை எடுத்து விட்டார். ஆனால் இந்த முறை இன்னமும் அதிக ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு கோப்பை வென்று கொடுப்பார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.