சி.எஸ்.கே அணியில் மீண்டும் தொடர்ந்து ஆடுவதைப் பற்றி மனம் திறந்த பாப் டூ பிளஸிஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி

0
434
Faf du Plessis Retention in IPL 2022

அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு தற்போததே ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றனர். கிட்டத்தட்ட அனைத்து அணிகளுமே எந்த நான்கு வீரர்களை அடுத்த ஆண்டு தொடருக்கு முன்னதாக தக்க வைக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்து விட்டனர். அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால் ஒவ்வொரு அணியும் இதில் அதிக கவனமாக செயல்பட்டு வந்துள்ளது. வரும் நவம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு அணிகளும் அதிகாரப்பூர்வமாக யாரை தக்கவைத்துள்ளது யாரை விடுத்துள்ளோம் என்பதை அறிவிக்க உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளுள் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான தோல்வியை பதிவு செய்தபோதும் அடுத்த ஆண்டே சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் அணிக்கு தலைமை தாங்குவதால் அதிக ரசிகர் பட்டாளங்களை இந்த அணி கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த அணி தோனி, ஜடேஜா மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் ஆகிய மூன்று இந்திய வீரர்களை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வீரர்களில் தான் மொயின் அலி, ஹேசல்வுட், சாம் குர்ரன் மற்றும் டுப்லஸ்ஸிஸ் ஆகிய நால்வரில் யாரை தக்கவைப்பது என்பதற்கான யோசனையில் அந்த அணி நிர்வாகம் மூழ்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடிய வீரர் தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த டுப்லஸ்ஸிஸ். மிகவும் குறைவான இடைவெளியில் சக வீரர் ருத்ராஜிடம் அதிக ரன்கள் எடுத்தவருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப்பினை இழந்தார். அதனால் இந்த ஆண்டும் சென்னை அணியில் அவர் நீடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் இந்த ஆண்டும் சென்னை அணிக்காக நீங்கள் விளையாட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பதில் கூறிய டூப்லஸ்ஸிஸ் அது நான் எடுக்க வேண்டிய முடிவு இல்லை என்றும் மீண்டும் சென்னை அணிக்கு ஆடுவதால் தனக்கு விருப்பம் என்று பதில் கூறியுள்ளார்.

ஆல்-ரவுண்டராக இருப்பதன் காரணமாக மொயின் அலியைத் தான் சென்னை அணி தக்கவைக்கும் என்று பலரும் கழித்து வரும் நிலையில் அந்த முடிவில் சென்னை அணி மாற்றம் எதுவும் கொண்டு வருமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.