வீடியோ: அம்பயரே ஒரு நிமிடம் கதிகலங்கிப்போன கேட்சை பிடித்த ஆஸி., வீரர்; மிரண்டுபோய் பார்த்துக்கொண்டிருந்த சக ஆஸி., வீரர்கள்!

0
3623

அசாத்தியமான கேட்சை பிடித்து அசத்தியுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுச்சானே.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு முதல் கட்டமாக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது தென் ஆப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி இந்த டெஸ்ட் தொடரில் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டியில் இரண்டையும் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேற முடியும்.

இந்நிலையில், இந்திய நேரப்படி டிசம்பர் 26 ஆம் தேதி 5 மணிக்கு துவங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஆஸ்திரேலிய அணி.

தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய துவங்கிய போது, துவக்க வீரர் மற்றும் கேப்டன் டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக ரன் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர் எர்வி 18 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

அடுத்து வந்த டி புரைன் வெறும் 12 ரன்களுக்கும் முன்னாள் கேப்டன் டெம்பா பவுமா வெறும் ஒரு ரன்களுக்கும் ஆட்டம் இழக்க, 58 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, நான்கு விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறி வந்தது தென் ஆப்பிரிக்க ஆணி.

அடுத்ததாக உள்ளே வந்த ஜோண்டோ, மிச்சல் ஸ்டார்க் பந்தை கவர் திசையில் அடிக்க முயற்சித்தார். மிட் விக்கெட் பகுதியில் நின்றுகொண்டிருந்த மார்னஸ் லபுச்சானே, அதை எதிர்பாராத விதமாக பாய்ந்து பிடித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு ஐந்தாவது விக்கெட்டும் கிடைத்தது.

யாருமே எதிர்பார்க்காத போது மார்னஸ் இப்படி ஒரு கேட்ச்சை பிடித்ததால் களத்தில் இருந்த நடுவர் உட்பட ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் ஒரு நிமிடம் திகைத்துப் போயினர். இந்த நிகழ்வின் வீடியோ காட்சி கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

67 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கி சென்று கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா அணியை மார்க்கோ ஜான்சன் மற்றும் கைல் வெரின்னே இருவரும் ஜோடி சேர்ந்து மீட்டு வருகின்றனர். தேநீர் இடைவெளிக்கு முன்பாக, 5 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்க அணி. அதிகபட்சமாக ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

மிரட்டலான கேட்ச் வீடியோ: