எதிர்பாராததை எதிர்பாருங்கள், இனி வரும் நாட்களில் எங்களுடைய ஆட்டம் வேற லெவலில் இருக்கும் – கேப்டன் ரிஷப் பண்ட்டின் அதிரடி பேச்சு

0
68

ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இன்று முதல் நடைபெற போகிறது. சீனியர் வீரர்கள் ரோஹித் , கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று காயம் காரணமாக கேஎல் ராகுல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக துணை கேப்டன் ரிஷப் பண்ட் தற்போது கேப்டனாக இந்திய அணியை வழிநடத்த போகிறார். இந்திய அணியை வழிநடத்துவது சம்பந்தமாக ரிஷப் பண்ட் நம்மிடம் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

நிறைய மாற்றங்களை இனி பார்க்க போகிறீர்கள்

ஒரு அணியாக நாங்கள் அனைவரும் இணைந்து நிறைய விஷயங்களை ஆலோசித்து இருக்கிறோம். நாங்கள் எட்ட வேண்டிய இலக்கு மற்றும் அடைய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் உலக கோப்பை தொடரும் காத்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் மனதில் வைத்து நாங்கள் விளையாடப் போகிறோம். இனிவரும் நாட்களில் எங்களுடைய ஆட்டத்தில்நிறைய மாற்றங்களை நீங்கள் காணப் போகிறீர்கள். எதிர்பார்த்திராத விஷயங்கள் அனைத்தையும் இனி நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்றும் அதிரடியாக ரிஷப் பண்ட் நம்மிடம் கூறியுள்ளார்.

நான் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்பவன்

- Advertisement -

இந்திய அணியை தலைமை தாங்குவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ” எனக்கு இந்த பொறுப்பு கடைசி நேரத்தில் கிடைத்துள்ளது. டெல்லியில் எனது சொந்த ஊரில் இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு மிகவும் பெருமை மற்றும் சந்தோஷம்.

எனக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை நான் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்வேன். தொடர்ந்து உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து கொண்டே இருந்தால், நீங்கள் உங்களை இன்னும் சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். அதேபோல என்னைப் பொறுத்தவரையில் நான் மறுபடி மறுபடி ஒரு விஷயத்தை செய்யும் பொழுது, அதில் தவறுகள் இருந்தால் அந்த தவறுகளிலிருந்து என்னை திருத்திக் கொள்வேன். இது என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு ஏழு மணி அளவில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.