தோனியிடமிருந்து கேப்டன் பதவியை பறிக்க பார்த்தாரா கோலி?  பயிற்சியாளர் ஸ்ரீதர் பரபரப்பு கருத்து

0
286

இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் பதவியை பெற பெரும் முயற்சிகளை விராட் கோலி எடுத்ததாக அப்போதைய பில்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் பயிற்சியாளராக செயல்பட்ட போது தனக்கு கிடைத்த அனுபவம் குறித்து ஸ்ரீதர் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அதில் விராட் கோலி 2014 ஆம் ஆண்டு டெஸ்ட் அணியில் கேப்டனாக பதவி ஏற்றதை குறிப்பிட்டுள்ளார்.

எனினும் விராட் கோலி ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து போட்டிக்கும் கேப்டனாக முயற்சி செய்ததாக அவர் விமர்சித்துள்ளார். வெளிப்படையாகவே கேப்டன் பதவியை பெற நான் ஆசைப்படுகிறேன் என்றும் கோலி பலமுறை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரத்தை ரவி சாஸ்திரி சிறப்பாக கையாண்டதாக ஸ்ரீதர் பாராட்டியுள்ளார்.

ஒருநாள் இரவு விராட் கோலியை தமது அறைக்கு அழைத்த ரவி சாஸ்திரி, தோனியை மதித்து கொஞ்சம் பொறுமை காத்தால் தான் மற்ற வீரர்கள் உன்னை மதிப்பார்கள் என்று விராட் கோலிக்கு ரவி சாஸ்திரி அறிகுறி வழங்கியதை ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் எவ்வாறு தோனியே உன்னிடம் கேப்டன் பதவியை வழங்கினாரோ, அதே மாதிரி ஒரு நாள் கிரிக்கெட்டிலும் தோனியே கேப்டன் பகுதியை உனக்கு வழங்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் ரவி சாஸ்திரம் அறிவுரை வழங்கியிருக்கிறார். ஆனால் அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றும் கேப்டன் பதவிக்கு பின்னால் செல்ல வேண்டாம் என்று விராட் கோலிக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

ரவி சாஸ்திரி இந்த அறிவுரையை விராட் கோலி மதித்ததாகும் அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு தோனி தனது கேப்டன் பகுதியை கோலிக்கு வழங்கியதாகவும் தனது சுயசரிதை புத்தகத்தில் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார். ரவி சாஸ்திரியின் இந்த முயற்சிக்குப் பிறகுதான் விராட் கோலி தோனி இடையே நல்ல உறவு ஏற்பட்டதாகவும் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார். கேப்டன் பதவி குறித்து ஸ்ரீதர் தற்போது வெளியிட்டுள்ள கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.