தினேஷ் கார்த்திக் இல்லை ; தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை கணிதுள்ள ரவி சாஸ்திரி

0
147

வருகிற ஜூன் 9-ஆம் தேதி முதல் இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கின்றது. ஐபிஎல் தொடர் நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வருகிற ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் எந்த பதினோரு வீரர்கள் இடம் பெற்று விளையாட போகிறார்கள் என்பது குறித்து ரவி சாஸ்திரி தற்போது பேசியிருக்கிறார். இந்த 11 வீரர்கள் களமிறங்கி விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்

- Advertisement -

ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ள 11 வீரர்களை கொண்ட இந்திய அணி

இந்திய அணியில் ஓபனிங் வீரர்களாக ருத்ராஜ் மற்றும் கே எல் ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இஷான் கிஷன் ஓபனிங் வீரராக விளையாட வாய்ப்பு இல்லை எனவே அவரை மூன்றாவது வீரராக விளையாட வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

மிடில் ஆர்டரில் நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்தாவது இடத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

5 பந்து வீச்சாளர்களை ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார்.அக்சர் படேல் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரை ஸ்பின் பந்து வீச்சுக்கு தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு புவனேஷ்வர் குமார்,அர்ஷ்தீப் சிங்/உம்ரான் மாலிக் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் சரியான தீர்வாக இருப்பார்கள் என்றும் கணித்துள்ளார். இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ரோஹித் ஷர்மா விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரியின் பிளேயிங் Xi : கே எல் ராகுல், ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்/உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல்.

ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் உலக கோப்பை டி20 தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருப்பதால், ஒவ்வொரு டி20 போட்டியும் இந்திய அணிக்கு அதன் பலத்தை தெரிந்து கொள்ள உதவும். எனவே தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் 5 டி20 போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நாம் எதிர்பார்க்கலாம்.