அது அடிக்கக்கூடிய பந்தே இல்லை; நான் தவறான ஷாட் விளையாடி தோல்விக்கு ஆரம்பப்புள்ளி வைத்துவிட்டேன் – தோல்விக்கு பொறுப்பேற்ற க்ருனால் பாண்டியா!

0
729

அடிக்கக்கூடாத பந்தில் தவறான ஷாட் விளையாடிவிட்டேன். இந்த தோல்விக்கு நான் தான் காரணம் இன்று போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்துள்ளார் க்ருனால் பாண்டியா.

பிளே-ஆப் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் லக்னோ அணி தொடரை விட்டு வெளியேறியது. மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாம் குவாலிபயர் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

- Advertisement -

போட்டியை இழந்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா, போட்டி முடிந்தபிறகு தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து வினவினார். அவர் பேசியதாவது:

“ஒரு கட்டத்தில் நாங்கள் நல்ல நிலையில் இருந்தோம். எங்களது தோல்விக்கான ஆரம்ப புள்ளி நான் தவறான ஷார்ட் விளையாடிய இடத்தில் தான் ஆரம்பித்தது. நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட பந்தில் அந்த ஷாட்டை நான் விளையாடியிருக்கக் கூடாது. துரதிஷ்டவசமாக அதை செய்துவிட்டேன். இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன்.

பிட்ச் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும், மிகப்பெரிய ஷார்ட்களை விளையாட முடியவில்லை என்றாலும், பந்து பேட்டிற்க்கு நன்றாக வந்தது. நிதானமாக விளையாடி, சுதாரித்து சிங்கிள் எடுத்திருக்க வேண்டும். பிரேக் முடிந்த பிறகு போட்டிக்குள் வந்தபோது எங்கள் ஆட்டம் சிறப்பாக இல்லை. நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்தவில்லை.

- Advertisement -

இன்று குவின்டன் டி காக் வெளியில் அமர்த்தப்பட்டு கைல் மேயர்ஸ் விளையாட வைக்கப்பட்டதற்கு காரணம், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நன்றாக விளையாடி இருக்கிறார். புள்ளிவிவரங்கள் நன்றாக இருக்கிறது என்பதால் தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சிற்கு எதிராக அபாரமாக விளையாடியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் பவர்-பிளே ஓவர்களில் முதல் ஓவரிலேயே சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினேன்.” என்று பேசினார் க்ருனால் பாண்டியா.