“என் மீது நம்பிக்கை வைத்த ரோகித்துக்குதான் எல்லாமே.. இது எனக்கு கடைசி உலக கோப்பை..!” – அஸ்வின் முக்கியமான பேச்சு!

0
1940
Ashwin

நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு இந்திய அணி இன்று தனது முதல் பயிற்சி போட்டியை இங்கிலாந்து அணிக்கு எதிராக அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் விளையாடுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் விடாமல் பெய்து கொண்டிருக்கும் மழையின் காரணமாக போட்டி தற்போது நிறுத்தப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த பயிற்சி போட்டி இந்திய அணிக்கு மட்டுமல்லாது இங்கிலாந்து அணிக்கும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். தற்பொழுது இங்கிலாந்து அணியின் பேட்டிங் யூனிட் உலகில் வலிமையான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் இந்தியா போன்ற சுழற் பந்துவீச்சில் சிறந்து விளங்கும் அணிக்கு எதிராக அவர்களது பேட்டிங் யூனிட் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது.

இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிராக எப்படி செயல்படுவார் என்று பார்ப்பதற்குக் காத்திருந்தார்கள்.

- Advertisement -

இன்று டாஸ் போடப்பட்டு அதற்குப் பிறகான நிகழ்வுகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் பிரத்தியேக பேட்டி ஒன்றை தொலைக்காட்சிக்கு தந்தார். அதில் சில விஷயங்களை முக்கியமாக குறிப்பிட்டு அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் இந்திய அணியில் இருப்பேன் என்று நினைக்கவில்லை. கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக விளையாட்டை ரசிப்பதே எனது முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். இந்த போட்டியில் மீண்டும் அதை செய்ய விரும்புகிறேன்.

என்னை கேமரா முன் நிறுத்தக்கூடாது என்று மீடியா நபரிடம் சொன்னேன். ஆனால் அவர் உங்களை தினேஷ் கார்த்திக் நேர்காணல் செய்கிறார் என்று சொன்ன காரணத்தினால் வந்தேன்.

போட்டிக்கான தயாரிப்பு என்பது நுட்பமான மாறுபாடுகள் பற்றியது.
மற்றும் அழுத்தத்தை கையாள்வது. நீங்கள் பந்தை இரு வழிகளில் திருப்புவதும் நம்புவது மட்டுமே உங்கள் கையில் இருக்கக்கூடிய ஒன்று.

இந்த போட்டியில் பெரும்பாலான வீரர்களுக்கு அழுத்தம் முதன்மையான ஒரு விஷயம். விளையாட்டு ரசிக்க பயிற்சி அளிப்பது என்னை சரியாக வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். போட்டியை அனுபவிக்க வேண்டும். இது எனக்கு கடைசி உலக கோப்பையாக இருக்கலாம். போட்டி ரசித்து விளையாடுவதுதான்!” எனக்கு முக்கியம் என்று கூறியிருக்கிறார்!