இந்த இந்திய வீரருக்காக எல்லாரும் டிவி முன் உட்காருவார்கள் – கிரீம் ஸ்மித் வியப்பு!

0
1417
Smith

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிராம் ஸ்மித் . இவர் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரரும் உலகின் தலைசிறந்த 360 டிகிரி பேட்ஸ்மனுமான ஏ பி டிவில்லியர்ஸ் இன் ஆரம்ப கால கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமானவர் . தனது சர்வதேச போட்டிகளின் ஆரம்ப நிலைகளில் டி வில்லியர்ஸ் தடுமாறிக் கொண்டிருந்தபோது அவருக்கு அதிகமான வாய்ப்புகளை வழங்கி நம்பிக்கை அளித்தார் ஸ்மித் . இவரது தலைமையின் கீழ் தென்னாபிரிக்க அணி உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக விளங்கியது ..

ஏ பி டிவில்லியர்ஸ் இன் திறமைகளை கண்டறிந்து அவருக்கு தொடக்கம் முதலே ஆதரவளித்து வந்த இவர் எ பி டிவில்லியர்ஸுக்கும் இந்திய அணியின் டி20 ஸ்டார் சூரியகுமார் யாதவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக கூறினார் .

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள அவர் “இந்திய அணியின் பேட்டிங்கை பொருத்தமட்டில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவர்கள் இருவரும் தான் கடந்த 10 வருடங்களாக இந்திய டேட்டிங்கின் முகங்களாக உலக அரங்கில் திகழ்ந்து வருகிறார்கள் . ஒரு சில நேரங்களில் கே எல் ராகுல் இவர்களைப் போல பிரகாசிக்கிறார் ஆனால் பொதுவாக அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் விராட் கோலி ரோஹித் சர்மாவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் .

“டெஸ்ட் போட்டிகள் என்று எடுத்துக் கொண்டால் ரிஷப் பண்ட் சத்தீசுவர் புஜாரா மற்றும் அஜிங்கிய ரகானே போன்றோர் அவ்வப்போது ஆதிக்கம் செலுத்தி வந்தனர் .. ஒரு நாள் போட்டிகளில் ஷிகர் தவான் சிறந்து விளங்கினார் . ஆனால் இவர்கள் யாராலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் இடத்தை அடைய முடியவில்லை . ஆனால் இந்த நிலை இன்று டி20 போட்டிகளில் மாறி இருக்கிறது . ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை விட சூரியகுமார் யாதவ் ஒரு பெரிய ஸ்டார் ஆக உருவெடுத்து இருக்கிறார் என்று கூறினார்

மேலும் இதுகுறித்து பேசியுள்ள அவர் “இந்த வருடம் தொடக்கத்திலிருந்து டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூர்யா குமார் யாதவ் தொடர்ச்சியாக ரன்களை குறிப்பதோடு மட்டுமல்லாமல் அதிகமான ஸ்டிரைக் ரேட்களையும் மெயின்டைன் செய்து வருவது ஒரு சிறந்த வீரத்திற்கான அறிகுறியாக திகழ்கிறது . இவர் ரோகித் மற்றும் விராட் கோலி போன்று மரபான கிரிக்கெட் சாட்களையும் ஆடுகிறார் ஏ பி டி வில்லியர்ஸ் போன்று 360 டிகிரி கோணங்களிலும் ஆடுகிறார் நான் ஐபிஎல் போட்டிகளில் இவரது ஆட்டத்தை காண்பது அலாதியான ஒன்று” என்றும் கூறினார் .

- Advertisement -

மேலும் சூரியகுமார் யாதவ் பற்றி கூறுகையில் ” அவரது ஆட்டம் எனக்கு பல வடிவங்களில் ஏபிடி’ ஐ ஞாபகப்படுத்துகிறது . அவரது சிந்தனை மற்றும் ஆட்டத்தை அணுகும் முறை ஆகியவற்றில் இவருக்கும் டிவில்லியர்ஸுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளை காண முடிகிறது . இவர் ஐபிஎல் தொடரில் ஆடும் போதே ஒவ்வொரு வருடமும் தனது ஆட்டத்தினை மெருகேற்றி வருவதை கண்டிருக்கிறேன் . இவர் பேட்டிங் ஆடும் பொழுது கொண்டு வருகின்ற அந்த எனர்ஜி மற்ற வீரர்களுக்கும் உத்வேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் இதே போன்ற எனர்ஜியை டிவில்லியர்ஸும் அணிக்குள் கொண்டு வருவார்” என்றும் கூறினார் .

“சில வீரர்களின் ஆட்டங்களை பார்ப்பதற்கு என்று மக்கள் தங்களுடைய தொலைக்காட்சியை பார்ப்பார்கள் அதேபோன்ற ஒரு வீரர் தான் சூரியகுமார் யாதவ்” என்று கூறி தனது பேட்டியை முடித்துக் கொண்டார் கிராம் ஸ்மித் ,