விரேந்திர சேவாக் உடைய தலைசிறந்த 5 நக்கலான பதில்கள்

0
325
Sehwag

இந்திய கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் மிக நக்கலாகவும் கிண்டலாகவும் பதிலளிக்கக் கூடிய ஒரு வீரர் வீரேந்திர சேவாக். ஒரு பக்கம் அவருடைய பேட்டிங் அதிரடியாக இருக்கும் என்றால் மறுபக்கம் அவருடைய
கமெண்ட்டுகள் மற்றும் கேட்கப்படும் கேள்விகளுக்கு அளிக்கும் பதில்களும் மிக அதிரடியாக இருக்கும்.

அப்படி அவர் நக்கலும் கிண்டலுமாக அடித்த தலை சிறந்த நகைச்சுவை பதில்களை பற்றி பார்ப்போம்

- Advertisement -

உங்களுக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இருக்கும் வித்தியாசம்

ஒரு சமயம் இவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வி என்னவென்றால் உங்களுக்கும் உங்களுடைய நண்பர் சச்சின் டெண்டுல்கருக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என்று?

அதற்கு பதிலளித்த விரேந்திர சேவாக் எங்கள் இருவருக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால் எங்கள் இருவரது வங்கி இருப்பு (பேங்க் பேலன்ஸ்) என்று மிக நக்கலாக பதிலளித்தார்.

மைக்கேல் கிளார்க் இடம் கேட்ட கேள்வி

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மைக்கேல் கிளார்க்கை செல்லமாக பப்என்று அழைப்பார்கள். 2004 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது.

- Advertisement -

அப்போது நடந்த ஒரு போட்டியில் மைக்கேல் சச்சினை சீண்டினார். பதிலுக்கு சச்சின் டெண்டுல்கர் விரேந்திர சேவாக் உடன் இணைந்து ஒரு கேள்வி கேட்டார். உங்களுடைய அணி வீரர்கள் உங்களை பப் என்று அழைப்பார்கள் என்று கேட்டார். அதற்கு மைக்கேல் கிளார்க் ஆமாம் என்று கூறினார்.

பதிலுக்கு உடனிருந்த விரேந்திர ஷேவாக்
அப்படி என்றால் நீங்கள் எந்த இனத்தைச் சேர்ந்த பப் என்று ஒரு கேள்வி கேட்டு மைக்கேல் கிளார்க்கை தர்மசங்கடம் அடைய வைத்தார்.

ஜாஃப்ரி பாய்காட் உடன் நடந்த சம்பவம்

இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பாய்காட் ஒருமுறை விரேந்திர சேவாக் இவை பற்றி பத்திரிக்கைகளில் பேசினார். அப்பொழுது விரேந்திர சேவாக் ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேன் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்று கூறி, ஆனாலும் அவர் டெக்னிக்கலாக அவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன் கிடையாது என்று கிண்டலாக கூறினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் விரேந்திர சேவாக், ஜாஃப்ரி பாய்காட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால் அவர் ஒரு முறை ஒரு நாள் முழுக்க பேட்டிங் செய்து ஒரே ஒரு பவுண்டரி மட்டும்தான் அடித்தார் என்று நக்கலாக பதில் அளித்தார்.

விரேந்திர சேவாக் டெஸ்ட் போட்டியில் அடித்த 300

பாகிஸ்தான் அணிக்கு எதிராக 300 ரன்கள் அடித்த போட்டியில், ஒரு கட்டத்தில் 295 ரன்கள் எடுத்து விரேந்திர சேவாக் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது சச்சின் டெண்டுல்கர் அவரிடம் சென்று தயவுசெய்து அடுத்த பந்தில் சிக்ஸர் அடிக்க வேண்டாம் என்று கூறினார். அதற்கு மிக நகைச்சுவையாக முஸ்தாக் பந்து வீச வந்தால் நான் நிச்சயமாகச் சிக்ஸர் தான் அடிப்பேன் என்று கூறினார். அவர் சொல்லியது போல் அடுத்த பந்தை முஸ்தாக் வீச வந்தார். அதேபோல் அவர் வீசிய பந்தை தூக்கி சிக்ஸராக அடித்து தனது 300வது ரன்னை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரேந்திர சேவாக் மற்றும் ஜேரமி ஸ்னபே

இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து நாட்டில் நடக்கும் கண்ட்ரி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு போட்டியில் விளையாடிய போது எதிர்முனையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரசாக் மிக அற்புதமாக பந்து வீசி வந்தார். அவர் அனைத்து பந்துகளையும் மிக சிறப்பாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார்.

நிலைமை மோசமாக செல்கிறது நாம் எப்படியாவது இந்த பந்தை மாற்றியாக வேண்டும் என்று சேவாக் ஜேரமியிடம் கூறினார். கூறிவிட்டு அதற்கு அடுத்த பந்தை தூக்கி அடித்து மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டார். கூலாக மீண்டும் ஜேரமியிடம் வந்து தற்பொழுது புதிய பந்து வந்து விடும். எனவே இனி ஒரு மணி நேரம் நாம் நிம்மதியாக எந்த பயமும் இல்லாமல் விளையாடலாம் என்று நகைச்சுவையாக கூறினார்.