ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாதது குறித்து முன்னாள் கொல்கத்தா கேப்டன் இயோன் மோர்கன் பேசியுள்ளது

0
1577
Eoin Morgan KKR

இங்கிலாந்து அணியின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டனாக மோர்கன் கடந்த ஆண்டுகளில் சிறப்பாக தனது பணியை செய்து வருகிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை மிக சிறப்பாக வழிநடத்தி முதல் முறையாக இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். அவரது தலைமையில் இங்கிலாந்து அணி டி20 போட்டிகளில் பல வெற்றிகளை கண்டிருக்கிறது.

ஐபிஎல் தொடரில் 2010 முதல் விளையாடி வரும் அவர் இதுவரை மொத்தமாக 83 போட்டிகளில் விளையாடி 1405 ரன்கள் குவித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 122.60 மற்றும் பேட்டிங் ஆவெரேஜ் 32.66 ஆகும். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக அந்த அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார். இறுதிப் போட்டியில் சென்னை அணி இடம் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரு கேப்டனாக கடந்த ஆண்டு கொல்கத்தா அணியை சிறப்பாக வழிநடத்தி இருந்தாலும் பேட்ஸ்மேனாக அவர் 17 போட்டிகளில் வெறும் 133 ரன்கள் மட்டுமே குவித்தார். அதேபோல இங்கிலாந்து அணியை கடந்த ஆண்டு நடந்து ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் அரை இறுதிப்போட்டி வரை முன்னேறி செய்தார். இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக தனது பணியை சிறப்பாக செய்து இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக 6 போட்டிகளில் 40 ரன்கள் மட்டுமே குவித்தார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் விலை போகாத மோர்கன்

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் தன் அடிப்படை விலையை ஒரு கோடியே 50லட்சம் ரூபாயாக நிர்ணயித்து இருந்தார். இருப்பினும் நடந்து முடிந்த ஏலத்தில் அவரை எந்த ஒரு அணியும் வாங்க முயற்சி கூட எடுக்கவில்லை. பேட்டிங்கில் மோசமான பார்மில் இருக்கும் அவரை எந்த ஒரு அணியும் வாங்க முயற்சி செய்யவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை.

இது சம்பந்தமாக அதைப் பற்றிப் பேசிய அவர் “முதல் சுற்றில் நான் ஏலம் போகாதது எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக படவில்லை. இருப்பினும் கடைசி சுற்றில் ஏதேனும் ஒரு அணி என்னை கைப்பற்றும் என்று நம்பியிருந்தேன். ஏதேனும் ஒரு அணிக்கு ரிசர்வ் வீரராக அல்லது அனுபவம் வாய்ந்த கேப்டனாக நான் உள்ளே நுழைவேன் என்று எதிர்பார்த்தேன். இருப்பினும் இறுதி வரை எந்த அணியும் என்னை வாங்க முயற்சி செய்யவில்லை” என்று தற்போது கூறியுள்ளார்.

- Advertisement -

நான் எனது ஆட்டத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன்

ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு விளையாடாதாதன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் நான் கிரிக்கெட் விளையாடாமல் ஓய்வு எடுக்கப் போகிறேன். அந்த இரண்டு மாத காலத்தில் நான் என்னுடைய ஆட்டத்தை சரிசெய்ய விரும்புகிறேன். நான் சமீப சில மாதங்களில் அவ்வளவு சிறப்பாக பேட்டிங் ஆடுவதில்லை அது எனக்கு நன்றாகவே புரிகிறது. எனவே என்னுடைய பேட்டிங்கை நான் மேம்படுத்த விரும்புகிறேன் என்றும், அதற்கு இந்த கால இடைவெளி மிகப்பெரிய அளவில் பங்காற்ற போகிறது என்றும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற இருக்கிறது. டி20 தொடருக்கு முன்பாக மோர்கன் சரியான பார்மில் மீண்டு வந்து இங்கிலாந்து அணியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதுதான் இங்கிலாந்து அணி ரசிகர்ளின் தற்பொழுதைய ஆசையாக உள்ளது.