இங்கிலாந்தின் இளம் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித் ஐபிஎல் மெகா ஏலத்தில் தன் பெயரை பதிவு செய்யாததற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார்.
தற்போது இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜேமி அறிமுகமானார். இவரது பேட்டிங் கவனிக்கத்தக்க வகையிலும் அமைந்திருந்தது.
தற்போது 24 வயதாகும் ஜேமி ஸ்மித் வலக்கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆகும். இவரது சிறப்பான பேட்டிங் திறமையின் காரணமாக இவரை இங்கிலாந்தின் அடுத்த ஆடம் கில்கிறிஸ்ட் என முன்னாள் வீரர்கள் கணித்திருக்கிறார்கள். இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஏழாவது இடத்தில் மிகச் சிறப்பான முறையில் அதிரடியாக விளையாடி வருகிறார்.
மேலும் தற்போது இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் தடுமாறிய பொழுது, உள்ளே வந்த ஜேமி ஸ்மித் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என உடனுக்குடன் அடித்து ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் இவர் பெயர் கொடுக்காமல் இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியப்படுத்தி இருந்தது.
இதுகுறித்து ஜேமி ஸ்மித் கூறும் பொழுது ” வீட்டில் ஒரு இளம் குடும்பம் இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணிக்காக நிறைய கிரிக்கெட்டும் இந்த ஆண்டில் இருக்கிறது. தற்போது நாங்கள் ஒரு பெரிய சுற்றுப்பயணத்திற்கு இங்கு வந்திருக்கிறோம். இந்திய தொடர் முடிந்து சாம்பியன்ஸ் டிராபி விளையாட வேண்டும். உடனே ஐபிஎல் தொடரும் வந்து விடும். குடும்பத்தை நீண்ட காலம் பிரிந்து இருக்க வேண்டியதாக இருக்கும். நான் குடும்பத்துடன் இருக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனவே தான் நான் ஐபிஎல் தொடரில் பெயர் கொடுக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் விளையாடுவேன்”
இதையும் படிங்க :
“எனக்கு டி20 போட்டியில் ஆறாவது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆறாவது இடம் என்பதால் நான் என்ன செய்ய வேண்டும்? என்கின்ற தெளிவு எனக்கு இருக்கிறது. இதே போல் தான் டெஸ்ட் அணியில் எனக்கு ஏழாவது இடம் கொடுக்கப்பட்டது. அதனால் நான் என்ன செய்ய வேண்டும்? என்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. எனக்கு எந்த ரோல் கொடுத்தாலும் அதில் நான் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.