50,000 பந்து.. இனி யாரும் செய்யவே முடியாத சாதனை.. ஆண்டர்சன் அதிசய ரெக்கார்ட்.. கடைசி டெஸ்டில் கலக்கல்

0
448
Anderson

நேற்று முதல் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிக் கொள்ளும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இனி யாரும் செய்ய முடியாத அளவுக்கு ஒரு சாதனையை படைத்திருக்கிறார்.

இந்த டெஸ்ட் போட்டி உடன் ஓய்வு பெற்றுக் கொள்வதாக ஜேம்ஸ் ஆண்டர்சன் ஏற்கனவே அறிவித்திருந்தார். 42 வயதில் சர்வதேச அளவில் பெரிய அணிக்கு வேகப்பந்து வீச்சாளராக வெற்றிகரமாக ஒருவர் இருப்பது என்பது இனி நடக்காது. இந்த நிலையில் அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பதால் லார்ட்ஸ் மைதானம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்து வருகிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆண்டர்சன் 1 விக்கெட்டும், 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார். தற்போது அவரது விக்கெட் எண்ணிக்கை 188 டெஸ்ட் போட்டிகளில் 703 ஆக இருக்கிறது. ஒரு வேகப்பந்துவீச்சாளராக அதிக டெஸ்ட் விக்கெட் கைப்பற்றியவராக அவர் இருக்கிறார்.

அதே நேரத்தில் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வேகப்பந்துவீச்சாளராக இன்று 50 ஆயிரம் பந்துகள் வீசியவராக சாதனை படைத்திருக்கிறார். இந்த பட்டியலில் முதல் மூன்று இடத்தில் சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றிருக்க, நான்காவது இடத்தில் வேகப்பந்துவீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். மேலும் இவரே அதிக பந்துகள் சர்வதேச கிரிக்கெட்டில் வீசிய வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இனி இந்த சாதனையையும் வேறு யாராவது வேகப்பந்துவீச்சாளர்கள் முறியடிப்பது இயலாதது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக பந்துகள் வீசியவர்கள்:
63132 – முத்தையா முரளிதரன்
55346 – அனில் கும்ப்ளே
51347 -ஷேன் வார்ன்
50001 – ஜேம்ஸ் ஆண்டர்சன்*

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகள் வீசியவர்கள் :
44039 – முத்தையா முரளிதரன்
40850 – அனில் கும்ப்ளே
40705 – ஷேன் வார்ன்
40001 – ஜேம்ஸ் ஆண்டர்சன்*
33698 – ஸ்டூவர்ட் பிராட்

இதையும் படிங்க : அதிரடி 5 அரை சதங்கள்.. மாஸ் காட்டிய இங்கிலாந்து.. 2வது நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் தோல்வி உறுதியானது.. முதல் டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் :
110 – க்ளென் மெக்ராத்
90 – ஜேம்ஸ் ஆண்டர்சன்*
89 – கபில் தேவ்
86 – பிரெட் ட்ரூமேன்
82 – முரளிதரன்

- Advertisement -