பேசிய பேச்சுக்கு பேட்டிங்கில் கோட்டைவிட்ட பாகிஸ்தான்… மீண்டும் இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது!

0
403

இங்கிலாந்து அணியிடம் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி இழந்திருக்கிறது.

முல்தான் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

முதல் இன்னிங்சில் 281 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நன்றாக விளையாடிக் கொண்டிருந்தது. 142/2 என இருந்த அந்த அணியை பந்துவீச்சில் தாக்குதல் நடத்தி 202 ரன்களுக்குள் சுருடியது இங்கிலாந்து அணி. 79 ரன்கள் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது.

இந்த முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சிலும் நிறுத்தாமல் தனது அதிரடியை தொடர்ந்தது. அந்த அணிக்கு முதல் போட்டியில் அசத்திய ஹாரி புரூக் இப்போட்டியிலும் கலக்கினார். இவர் சிறப்பாக விளையாடி சதம் விலாசி 108 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 275 ரன்கள் மற்றும் முதல் இன்னிங்சில் 79 ரன்கள் முன்னிலை என இரண்டையும் சேர்த்து 354 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது இங்கிலாந்து அணி.

- Advertisement -

இரண்டாம் நாள் பாதியிலேயே இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆகியது. மீதம் 2 1/2 நாட்கள் இருந்தது. எளிதாக இந்த இலக்கை பாகிஸ்தான் அணி செஸ் செய்துவிடலாம் என்று நினைத்து களம் இறங்கியது. ரிஸ்வான் மற்றும் அப்துல்லா இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.

பின்னர் வந்த இமாம் உல்ஹக்(60) மற்றும் சவுத் சக்கீல்(94) இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி எடுத்துச் சென்றனர். துரதிஷ்டவசமாக இவர்கள் ஆட்டம் இழந்ததால் பின்னர் வந்த வீரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்பரன்களுக்கு அவுட் ஆகினர்.

45 ரன்கள் அடித்த நவாஸ், வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையை மட்டுமே சிறிது நேரம் கொடுத்தாரே தவிர வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இறுதியில் 328 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரை கைப்பற்றி அசத்தியது.

17 வருடங்களுக்குப் பின் பாகிஸ்தான் வந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியதில் வரலாற்று சாதனைகள் பலவும் நிகழ்ந்திருக்கிறது.