“இங்கிலாந்து ஜெயிக்கவே ஜெயிக்காது.. இது நடந்தா மட்டும்தான் வாய்ப்பு இருக்கு” – பதிலடி கொடுக்கும் ஹர்பஜன்

0
110
Harbajan

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியதில் இருந்து, சரிந்து வந்த டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு மீண்டும் கொஞ்சம் பெருக ஆரம்பித்திருக்கிறது.

காரணம், முன்பு போல எந்த அணிகளும் டிராவை நோக்கி விளையாடுவது கிடையாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்கின்ற காரணத்தினால், வெற்றியை நோக்கி விளையாடுகிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக தைரியமான அணுகுமுறையை அணிகள் வெளிப்படுத்துகின்றன. இதனால் டெஸ்ட் போட்டி பார்ப்பதற்கு சுவாரசியமானதாக விறுவிறுப்பானதாக தற்பொழுது மாறி இருக்கிறது.

மேலும் ஆடுகளங்களும் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் அளவுக்கு பந்துவீச்சுக்கு கொஞ்சம் சாதகமானதாக உருவாக்கப்படுகிறது. எனவேடெஸ்ட் போட்டியில் முடிவு தெரியும் சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

இப்படியான டெஸ்ட் கிரிக்கெட் சூழலில், கடந்த ஒன்று இரண்டு வருடங்களாக அதிரடியாக விளையாடுவதை தங்களுடைய பாணியாக வைத்திருக்கும் இங்கிலாந்து இந்திய அணி உடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுவது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இது முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கும் எதிர்பார்ப்பை கொடுத்திருக்கிறது. இந்தியாவில் வெல்வதுகடினம் என்கின்ற காரணத்தினால், இங்கிலாந்து முன்னாள் வீரர்களிடமிருந்து சூடான கருத்துக்கள், அதில் கொஞ்சம் சர்ச்சையான கருத்துக்களும் வருகிறது. பீட்டர்சன் மற்றும் மான்டி பனேசர் போன்ற இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் களத்தை சூடாக்கி வைத்திருக்கிறார்கள்.

இதற்கு கொஞ்சம் பதிலடி தரும் விதமாக பேசி உள்ள ஹர்பஜன்சிங் கூறும் பொழுது “இங்கிலாந்தின் பாஸ்
பால் இந்தியாவில் வெல்ல முடியாது. இந்தியாவில் இங்கிலாந்துக்கு கண்டிஷன் மிகவும் கடினமாக இருக்கும். முதல் நாளிலிருந்து ஆடுகளங்கள் மாற ஆரம்பிக்கும். உங்களிடம் துல்லியமான ஸ்பின்னர் இருந்தே ஆகவேண்டும்.

இரு அணிகளுக்குமே இந்த மாதிரியான கண்டிஷனில் டாஸ் என்பது முக்கியமான விஷயம். ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பெரிய அளவில் சாதகம் இல்லை என்றால் மட்டுமே, இங்கிலாந்து அணி ஏதோ வெல்வதற்கு வாய்ப்பு உண்டு. மற்றபடி வாய்ப்பு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.