3-0 என வென்ற இங்கிலாந்து அணியால், இந்தியாவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் சிக்கல் வருமா?

0
11161

பாகிஸ்தானை ஒயிட்-வாஷ் செய்த இங்கிலாந்து அணியால் இந்தியாவிற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆபத்து வருமா? என்பதை பற்றி இங்கே காண்போம்.

கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று டெஸ்ட் போட்டிகளையும் கைப்பற்றி என பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணி தன் சொந்த சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் ஆனது இதுதான் முதல் முறை.

- Advertisement -

இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பிறகு, இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 47 சதவீத வெற்றிகள் உடன் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறது. நான்காவது (53 சதவீதம்) மற்றும் மூன்றாவது (54 சதவீதம்) இடங்களில் முறையே இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இருக்கின்றன.

முதல் இரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (76 சதவீதம்) மற்றும் இந்தியா (55 சதவீதம்) அணிகள் இருக்கின்றன. ஆறாவது இடத்தில் 42 சதவீதம் வெற்றிகளுடன் இருந்து வந்த பாகிஸ்தான் அணி, இந்த தொடரை இழந்த பிறகு ஒரு இடம் பின்தங்கி 39 சதவீதம் வெற்றிகளுடன் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணியின் நிலை..

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கு சிக்கலாக இருப்பது தென்னாப்பிரிக்கா அணி மட்டுமே. அந்த அணியால்தான், நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடர் மற்றும் பின்னர் நடக்கவிருக்கும் பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி இந்தியாவைப் பின்னுக்கு தள்ள முடியும்.

அதே நேரம் இந்திய அணி வங்கதேச அணியுடன் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று, அதன் பிறகு நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் எளிதாக முதல் இரண்டு இடங்களுக்குள் நீடித்து இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற முடியும். வேறு எந்த அணியின் வெற்றி/தோல்வியும் இந்தியாவை பாதிக்காது.

பாகிஸ்தான்-இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டிக்குப்பின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: