“சொந்த மண்ணில் பரிதாபம்” பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது இங்கிலாந்து!

0
193

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி.

டெஸ்ட் தொட பாகிஸ்தான் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலி(122), பென் டக்கட்(107), ஆலி போப்(108) மற்றும் புரூக்(153)ஆகியோர் சதமடிக்க 657 ரன்கள் அடித்தது.

இமாலய ஸ்கோரை துரத்தி முதல் இன்னிங்சில் முன்னிலை பெறுவதற்கு விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சஃபீக்(114), இமாம்-உல்-ஹக்(121) மற்றும் கேப்டன் பாபர் அசாம்(136) ஆகிய மூவரும் சதமடித்து உதவ பாகிஸ்தான் அணி 579 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

78 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, மீண்டும் அதிரடியை வெளிப்படுத்தி 35.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 342 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு 5வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த பாகிஸ்தான் அணிக்கு மிடில் ஆர்டரில் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. 258 ரன்கள் வரை 5 விக்கெட்டுகள் இழந்திருந்த பாகிஸ்தான் அணிக்கு 259வது ரன்னில் 6வது விக்கெட் விழுந்தது. அதன்பின் வந்த வீரர்கள் ஒன்றன்பின் மற்றொருவராக அவுட்டாக, 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருகட்டத்தில் பாகிஸ்தான் அணி வென்றுவிடும் என இருந்தபோது கடைசி கட்டத்தில் வரிசையாக விக்கெட் இழந்தது பெருத்த பின்னடைவை தந்து, தோல்வி பரிசாக கிடைத்துள்ளது. இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக ராபின்சன், ஆண்டர்சன் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.