இங்கிலாந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் காயம்? இந்தியாவுடன் விளையாடுவாரா?

0
1828
England

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக்கோப்பை தொடர் பிரதான சுற்றை முடித்துக் கொண்டு அரையிறுதி சுற்றில் காலடி எடுத்து வைத்திருக்கிறது!

இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் குழுவில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும் இரண்டாவது குழுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளன!

முதல் குழுவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இங்கிலாந்து அணி நாளை மறுநாள் அடிலெய்டு மைதானத்தில் இரண்டாம் குழுவில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி உடன் இரண்டாவது அரையிறுதியில் மோத இருக்கிறது!

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான முதல் சுற்று கடைசிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் டேவிட் மலான் இடுப்பு பகுதி காயத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறினார். அவர் அறையிறுதியில் விளையாடுவாரா என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை!

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, அந்த அணியின் அதிவேக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் ஜெனரல் பாடி ஸ்டிப்னஸ் எனும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பெரிய வருகிறது.

இன்று இங்கிலாந்து அணிக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி அமர்வு கிடையாது. ஆனால் விருப்பப்படும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம். இப்படியான பயிற்சியில் ஒரு சிறிய ஜாகிங்கில் ஈடுபட்ட மார்க் வுட் சிறிது நேரத்தில் அதிலிருந்து பொது உடல் விறைப்புத்தன்மையால் வெளியேறினார்!

இவர் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் ஐந்து ஆட்டங்களில் ஒன்பது விக்கட்டுகளை 12 சராசரியில் 7.71 எகானமியில் வீழ்த்தி, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி முன்னணியில் உள்ள தனது அணியின் சக வேகப்பந்துவீச்சாளர் சாம்கரன் உடன் சிறந்த வேகபந்து வீச்சு பார்ட்னர்சிப்பை உருவாக்கி வந்தார். இந்த நிலையில் இவரது காயம் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய கவலையான விஷயமாக அமைந்திருக்கிறது!