4 இங்கிலாந்து வீரர்கள் செஞ்சுரி; முதல் நாள் முடிவில் முழி பிதுங்கி நிற்கும் பாகிஸ்தான் அணி!

0
975

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நான்கு இங்கிலாந்து வீரர்கள் சதம் அடித்து அசத்தியிருக்கின்றனர் முதல் நாள் முடிவு இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 506 ரன்கள் அடித்தது.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

- Advertisement -

துவக்க வீரர்கள் ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் இருவரும் முதல் ஓவரில் இருந்து அதிரடியை வெளிப்படுத்த துவங்கினர். நசீம் ஷா வீசிய போட்டியின் முதல் ஓவரில் மூன்று பவுண்டர்களை ஜாக் கிராலி அடித்தார். அதிலிருந்து நிறுத்தவே இல்லை

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக, அதிவேகமாக 100 ரன்களை சேர்த்த துவக்க ஜோடி என்ற சாதனையை இந்த ஓப்பனிங் ஜோடி நிகழ்த்தியுள்ளது. இவர்கள் 13.5 ஓவர்களில் 100 ரன்கள் கடந்தனர்.

இந்த துவக்க ஜோடி இத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து பவுண்டரிகளாக அடித்து சிக்கலை உண்டாக்கினர். முதல் விக்கெட்டிற்கு 200 ரன்கள் கடந்தும் விளையாடினர்.

- Advertisement -

35.4 ஓவர்களில் 233 ரன்கள் அடித்திருந்தபோது ஜாக் கிராலி ஆட்டமிழந்தார். இவர் 21 பவுண்டரிகள் உட்பட 122(111) ரன்கள் அடித்திருந்தார். அடுத்த ஓவரில் மற்றொரு துவக்க வீரர் பென் டக்கட் சதம் அடித்த பிறகு, 15 பவுண்டரிகள் உட்பட 107(110) ரன்களுக்கு அவுட்டானார்.

அடுத்ததாக வந்த ஆலி போப், அதே அதிரடியை தொடர்ந்தார். அரைசதம் கடந்தும் நிற்காமல் பவுண்டரிகளை விளாசி சதமாக மாற்றினார். இவர்108(104) ரன்களில் அவுட்டானார். ஜோ ரூட் 23 ரன்களுக்கு வேகியேறினார்.

ஹாரி புரூக் (101*) சதமடித்த இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார், இவருடன் பென் ஸ்டோக்ஸ் 34* (15) ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். முதல் நாள் முடிவில், 75 ஓவர்களுக்கு 506 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து அணி.

முதல் நாளில் 500+ ரன்கள், 4 சதங்கள் என எவரும் நிகழ்த்திராத சாதனையை படைத்தது இங்கிலாந்து அணி. இவர்களின் பேட்டிங்கால் பாகிஸ்தான் பவுலிங்ர்கள் செய்வதறியாது முழி பிதுங்கினர்