நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கும் இங்கிலாந்து அணி – 5வது டெஸ்ட்டுக்காண வீரர்கள் பட்டியல்

0
68

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்தது. மீதம் ஒரு போட்டி எதிர்பாராதவிதமாக நடைபெறாமல் போனது அப்போட்டி மீண்டும் தற்போது வருகிற ஜூலை 1ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. நான்கு போட்டிகளில் முடிவில் இந்திய அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வியை தவிர்க்க வெற்றி பெற வேண்டும் அதே சமயத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்ற வெற்றி அல்லது சமன் செய்ய வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் அனைத்து போட்டியிலும் நியூசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது.

- Advertisement -

பிரண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராகவும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும் அந்த அணியை மிகச்சிறப்பாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அந்த அணி தற்போது அபாரமான பார்மில் உள்ளது. இந்திய அணி 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அணிக்கு எதிராக களமிறங்க இருக்கும் இங்கிலாந்து அணி பட்டியல்

5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், சாம் பில்லிங்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் ஃபோக்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், கிரேக் ஓவர்டன், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆலி போப்

- Advertisement -

5வது டெஸ்ட் போட்டி நடைபெற இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் இந்திய அணியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா விளையாட முடியாத காரணத்தினால் அவருக்கு பதிலாக மயன்க் அகர்வால் இந்திய அணியில் ஓபனராக களமிறங்க போவதும் குறிப்பிடத்தக்கது.