பாகிஸ்தான் விரலை வைத்து பாகிஸ்தான் கண்ணை குத்திய இங்கிலாந்து ; வார்னே வாக்கு பலித்தது!

0
331
rehan ahmed hane warne

இங்கிலாந்து அணி  17 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து லேட்டஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது  மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில்  முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது  இங்கிலாந்து அணி .

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் ‘கராச்சி’ நகரில் இன்று தொடங்கியது ‘டாஸ்’ல்  வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி  304 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ‘பாபர் ஆசாம்’ 78 ரன்களை எடுத்தார் .

- Advertisement -

இந்தப் போட்டியில்  இங்கிலாந்து அணிக்கு அறிமுக வீரராக  பாகிஸ்தான் வம்சாவளியைச் சார்ந்த ‘ரெஹான் அகமது’ என்ற  ‘லெக் ஸ்பின்னர்   ஆண்டர்சனு’க்கு  பதிலாக  களம் இறங்கினார் . இவர் இங்கிலாந்து அணிக்காக  டெஸ்ட் போட்டியில் ஆடும்  மிகவும் இள வயது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த ‘ரெகான் அஹமது’  கடந்த வருடம் நடைபெற்ற  19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியின் போது  இவர் வருங்காலத்தில் ஒரு சிறந்த ‘ஸ்பின் பௌலராக’ வருவார் என்று  முன்னாள் கிரிக்கெட் வீரர்களாலும்  விமர்சகர்களாலும்  பெரிதும் பாராட்டப்பட்டவர்.

சுழற் பந்துவீச்சு ஜாம்பவான் ‘ஷேன் வார்னே’ ரெஹான் அகமது குறித்து ஐந்து வருடங்களுக்கு முன்பே தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார் .’ரெகான்’ குறித்து பேசிய ஷேன் வார்னே “இவர் பின்னாளில் மிகச் சிறந்த ஒரு சுழற் பந்துவீச்சாளராக வருவார் என்றும் இவரது கூகுளி பிற்காலத்தில் ஒரு தலைசிறந்த ஆயுதமாக இருக்கும்” என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இன்று தன்னுடைய அறிமுக போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இவர்  ‘சவுத் சக்கீல்’ ன் விக்கெட்டை  தனது ‘கூகுளி’ மூலம் வீழ்த்தி  தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வின்  அத்தியாயத்தை தொடங்கினார் . பாகிஸ்தான் வம்சாவளியைச் சார்ந்த வீரர்  இங்கிலாந்து அணிக்காக  தனது பூர்வீகமான பாகிஸ்தான் மண்ணில்  அவரது டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கியது  சிறந்த அனுபவமாக  உள்ளது. இந்தப் போட்டியில்  22 ஓவர்கள் வீசிய  ‘ரேஹான் அகமது’  89 ரன்களை கொடுத்து  இரண்டு விக்கெட் களை வீழ்த்தி இருக்கிறார் .