வீடியோ: பாகிஸ்தான் முன்னாள் கேப்டனை உரிய மரியாதையுடன் வழியனுப்பிய இங்கிலாந்து வீரர்கள்.. நெகிழ்ச்சி சம்பவம்!

0
404

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அசார் அலிக்கு இது கடைசி டெஸ்ட் என்பதால், அவர் ஆட்டமிழந்த பிறகு உரிய மரியாதையுடன் இங்கிலாந்து வீரர்கள் வெளியே அனுப்பியுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி டெஸ்ட் வீரர் அசார் அலி, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது, இதுதான் எனக்கு கடைசி டெஸ்ட் தொடர்; மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

- Advertisement -

டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு இன்றியமையாத பங்களிப்பை கொடுத்திருக்கும் அவர் ஓய்வு முடிவை அறிவித்ததும் பலருக்கும் சற்று ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் நல்ல பார்மில் இருக்கிறார்.

ஆனாலும் 37 வயதான அவர் சரியான நேரத்தில் இந்த முடிவு எடுத்திருக்கிறார். இளம் வீரர்கள் பலர் அவரது இடத்தை நிரப்புவதற்கு முயற்சிப்பார்கள் இது அணியின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானது தான் என கருத்துக்களை தெரிவித்தனர்.

அசார் அலி தனது கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 68 பந்துகளில் 45 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவருக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. துரதிஷ்டவசமாக நான்கு பந்துகள் பிடித்து ரன் ஏதும் எடுக்காமல் ஜாக் லீச் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

அவர் வெளியேறியபோது, இங்கிலாந்து அணி வீரர்கள் உடனடியாக அவரிடம் ஓடிவந்து கைகுலுக்கி நல்ல முறையில் வழி அனுப்பி வைத்தனர். அவர் பெவிலியன் நோக்கி செல்லும் பொழுது பாகிஸ்தான் வீரர்கள் பேட்டை கோபுரம் போல உயர்த்தி பிடித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வின் வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அசார் அலி பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 97 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார். 180 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அவர் 7142 ரன்கள் அடித்திருக்கிறார்.இதில் 19 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். அத்துடன் மூன்று இரட்டை சதங்களும் அடித்திருக்கிறார். அதில் ஒரு முச்சதமும் அடங்கும். இவரது அதிகபட்ச ஸ்கோர் 302 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் இவரது சராசரி 41.93 ஆகும்.

தொடர்ச்சியாக இத்தனை ஆண்டுகள் பங்களிப்பை கொடுத்த அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். இவருக்கு பாகிஸ்தான் அணி நிர்வாகம் உரிய மரியாதையும் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

வீடியோ: