1992 ஸ்க்ரிப்ட், அது இதுன்னு பாகிஸ்தான் பகல்கனவு கண்டுட்டு இருக்கு – அனில் கும்ப்ளே சரமாரியாக பேட்டி!

0
3483

உலககோப்பை இறுதி போட்டியில் இந்த அணிதான் வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் அணில் கும்ப்ளே.

டி20 உலக கோப்பை அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் பைனலுக்கு முன்னேறி இருக்கின்றன

- Advertisement -

மெல்போrன் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியின்போது 95 சதவீதம் மழை காரணமாக ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை போட்டி நடைபெறவில்லை என்றால், இறுதிப் போட்டிக்கு என்று ரிசர்வ் செய்யப்பட்ட நாளான திங்கட்கிழமை அன்று நடத்தப்படும். அப்போதும் போட்டி முழுமையாக நடத்தப்பட முடியாமல் போனால், ஐசிசி விதிமுறைப்படி, கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும் என்ற விதிமுறை இருக்கிறது.

ஒருவேளை போட்டியில் மழையின் குறுக்கீடு இல்லையென்றால், எந்த அணி பலம் பொருந்தியதாக இருக்கிறது? யாருக்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது? என்கிற கணிப்புகளை பலரும் வெளியிட்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

“மெல்போர்ன் மைதானம் பவுன்ஸ் மற்றும் ஸ்விங் இரண்டிற்கும் மிகவும் சாதகமாக இருக்கும். அதேநேரம் மற்ற மைதானங்களை விட அதிகமான வேகத்தில் பந்து பேட்ஸ்மேன்களுக்கு வரும். சரியாக டைமிங் செய்யும் பேட்ஸ்மேன்கள் இந்த மைதானத்தில் ரன்களை குவிப்பர்.

பாகிஸ்தான் அணியிலும் அந்த வேகத்தில் பந்து வீசுவதற்கு மற்றும் ஸ்விங் செய்வதற்கு பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணியை இங்கிலாந்தின் துவக்க வீரர்கள் எதிர்கொண்ட விதத்தை பார்க்கும் பொழுது தற்போது இங்கிலாந்து அணிக்கு அதிக அட்வான்டேஜ் இருக்கிறது.

இங்கிலாந்தின் கை இறுதிப்போட்டியில் ஓங்கி இருக்கும் என நினைக்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இறுதிப் போட்டி இருக்கும். என்னை பொருத்தவரை, இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனெனில் வேகத்திற்கு மார்க் வுட் இருக்கிறார். பந்தை ஸ்விங் செய்வதற்கு கிறிஸ் வோக்ஸ் இருக்கிறார். சூழலில் ரஷீத் மற்றும் லிவிங்ஸ்டன் அசத்துகிறார்கள்.” என்றார்.