தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிளேயிங் லெவனை முன்கூட்டியே இங்கிலாந்து அணி அறிவித்திருக்கிறது.
இலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 114 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்வி அடைந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.
இந்தத் தொடரை இனி இங்கிலாந்து இழக்காது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த போட்டியை வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக காபா டெஸ்டில் வெற்றி பெற்று மிகவும் தன்னம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட மோசமான தோல்வியை அடைந்தார்கள்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இங்கிலாந்து தொடர்ந்து வீணடித்து வருகிறது என்கின்ற குற்றச்சாட்டு அந்த அனிமல் இருக்கிறது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் அணி இனி வருங்காலங்களில் டெஸ்ட் தொடர்களை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இதன் காரணமாகவே ஜேம்ஸ் ஆண்டர்சனை ஓய்வு பெற கேட்டு அவர் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றிருக்கிறார். தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அவருடைய இடத்திற்கு அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் கொண்டு வரப்பட்டு இருக்கிறார். மற்றபடி முதல் டெஸ்டில் விளையாடிய பழைய வீரர்களே விளையாடுகிறார்கள்.
இதையும் படிங்க : 43/7.. அமெரிக்காவின் ஆர்சிபியாக மாறிய மும்பை இந்தியன்ஸ்.. ஹெட் அதிரடி.. வாஷிங்டன் ஃப்ரீடம் அணி வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் :
ஸாக் கிரவுலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (வி.கே.), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மார்க் வுட் மற்றும் சோயப் பஷீர்