அட நானும் இந்திய பேட்ஸ்மேன் தாங்க நம்புங்க – மறுபடியும் அட்டகாசம் செய்த ஜார்வோ

0
1994

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணி மூன்றாவது டெஸ்டிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று பலர் நினைத்து நிலையில் மூன்றாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு மொத்த இந்திய அணியும் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகவும் சோர்ந்து போயினர்.

இது மட்டும் போதாமல் ஏற்கனவே இந்த தொடரில் இந்திய வீரர்களை படாத பாடு படுத்தும் ஜோ ரூட் இந்த டெஸ்டிலும் சதம் கடந்து அசத்தினார். இந்திய அணியின் பந்துவீச்சு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டிடம் சுத்தமாக எடுபடவில்லை. பேட்டிங் பௌலிங் என எதுவுமே நல்லபடியாக அமையாததால் இந்திய வீரர்கள் அனைவரும் மிகவும் சோகமாக காணப்பட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய ரசிகர்களை மகிழ்வித்த ஜார்வோ என்னும் பெயர் கொண்ட ரசிகர் ஒருவர் இந்த டெஸ்டிலும் மைதானத்துக்குள் நுழைந்து விட்டார். ஏற்கனவே கடந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி பீல்டிங் செய்ய வரும்போது வீரர்களுடன் வீரராக யாருக்கும் தெரியாமல் மைதானத்தின் நடுவே வரைக்கும் வந்து விட்டார் ஜார்வோ. அதன்பிறகு மைதானத்திற்கு உள்ளிருக்கும் பாதுகாவலர்கள் அவரை அப்புறப்படுத்தினர். ஜார்வோவின் இந்த செயலைப் பார்த்து இந்திய வீரர்களான ஜடேஜா மற்றும் சிராஜ் கூட விழுந்து விழுந்து சிரித்தனர். பின்னர் இந்த ஜார்வோ என்னும் நபர், நான் தான் இந்த செயலைச் செய்தேன் என்று ட்விட்டரில் ஒரு ட்வீட்டை போட அதுவும் ரசிகர்களிடையே மிகவும் வைரல் ஆனது.

தற்போது மூன்றாவது டெஸ்டிலும் ரோகித் அவுட் ஆனதும் மைதானத்திற்குள் ஜார்வோ நுழைந்து விட்டார். இந்த முறை பேட் ஹெல்மட் போன்றவைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு உண்மையான பேட்டிங் வீரர்களைப் போலவே மைதானத்துக்குள் வந்து விட்டார் ஆனால் இந்த முறை மைதானத்திற்கு நடுவில் வரை அவரை அனுமதிக்காமல், பாதியிலேயே பாதுகாப்புத் துறையினர் அவரை அடையாளம் கண்டு அப்புறப் படுத்தி விட்டார்கள். தோல்வியை தவிர்க்க இந்திய வீரர்கள் போராடி வரும் நிலையில் ஜார்வோவின் இந்த செயலால் ரசிகர்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.