நானும் இந்திய வீரர் தான் – லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ருசிகர சம்பவம்

0
4943
India vs England Test

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. முதல் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்து டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்திய வீரர் கே எல் ராகுல் அற்புதமாக ஆடி சதம் கடந்தார். மற்றொரு துவக்க வீரரான ரோகித் அரைசதம் அடித்தார். தற்போது இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

இந்நிலையில் உணவு இடைவேளையை முடித்து இந்திய அணி வீரர்கள் திரும்பும் போது ஒரு ருசிகர சம்பவம் நடந்தது. பெவிலியனில் இருந்து இந்திய வீரர்கள் ஆடுகளத்திற்கு உள்ளே வரும் போது பன்னிரெண்டு வீரர்கள் தளத்திற்குள் வந்தனர். ஒருவர் அதிகமாக இருக்கிறாரே என்று காவலாளிகள் தேடும் போது, ஜார்வோ என்று பெயருடன் இருந்த ஜெர்சியை அணிந்த வீரர் ஒருவர் களத்திற்குள் இருந்தார். அச்சு அசலாக இந்திய வீரர்கள் அணிந்திருந்த உடையையே அணிந்திருந்தார். 69 என்ற எண்ணும் அவரது ஆடையில் இருந்தது.

காவலாளிகள் வந்து அவரை தடுக்க முயன்ற போது, நானும் இந்திய அணி வீரர்கள் அணிந்திருக்கும் உடையைத் தான் நானும் அணிந்திருக்கிறேன் என்றும் நானும் இந்தியாவிற்கு ஆடுகிறேன் என்றும் கூறினார் அவர். காவலாளிகள் அவரை இந்திய வீரர்களிடம் இருந்து பிரித்து வெளியே அழைத்துச் சென்றனர்.

இதைப் பார்த்த இந்திய வீரர் சிராஜ் விழுந்து விழுந்து சிரித்தார். கேமராவில் சிராஜின் சிரிப்பை மட்டும் தனியாக பதிவு செய்தனர். நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் இந்த சிரிப்பின் மூலம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளார். தற்போது இங்கிலாந்து அணி வீரர் 150 ரன்களைக் கடந்து வெற்றிகரமாக ஆடி வருகிறார்.

இங்கிலாந்து அணி இந்திய அணி அடித்த ஸ்கோரை விட அதிகமாக அடித்து விட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் நிலைத்து நின்று ஆடாவிட்டால் இந்த டெஸ்ட்டை இந்திய அணி வெல்வது சற்று கடினம் தான்.