6 ஓவர்கள் 6 விக்கெட்.. தனி வரலாற்றில் முதல்முறை.. பிரியாவிடை டெஸ்ட்க்கு முன்பாக ஆண்டர்சன் அதிரடி

0
24
Anderson

நூறு ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்கின்ற ஆச்சரியப்படத்தக்க சாதனையை செய்தவராக 41 வயதான வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். நேற்று கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக பதிவு செய்ய போதும் வித்தியாசமான ஒரு சாதனையையும் பதிவு செய்திருக்கிறார்.

தற்பொழுது 41 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் சொந்த நாட்டில் ஜூலை 10ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டி உடன் ஓய்வு பெற இருக்கிறார். இதற்காக ஒட்டுமொத்த இங்கிலாந்து கிரிக்கெட்டும் காத்திருக்கிறது.

- Advertisement -

இதற்காக பயிற்சி பெறும் விதமாக தன்னுடைய கவுண்டி அணியான லங்காசையர் அணிக்கு ஆண்டர்சன் களம் இறங்கினார். நாட்டிங்ஹாம்சையர் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் முதலில் வீசிய முதலில் வீசிய பத்து ஓவர்களில் தனிப்பட்டு ஆறு ஓவர்களில் ஒவ்வொரு விக்கெட்டுகளாக அவர் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வயதான பந்துவீச்சாளராக இருந்தபோதிலும் அவருடைய கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆச்சரியப்படத்தக்க அளவில் இருந்தது. மேலும் அவர் ஒரே ஸ்பெல்லில் பத்து ஓவர்கள் 10 ஓவர்கள் பந்துவீசி, 2 மெய்டன்கள் செய்து,19 ரன்கள் தந்து 6 விக்கெட் கைப்பற்றினார்.

அதே சமயத்தில் மேற்கொண்டு அவர் ஏழு ஓவர்கள் வீசி விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றவில்லை. அவருடைய கிரிக்கெட் வரலாற்றில் ஏழு ஓவர்கள் தொடர்ந்து பந்த வீசி விக்கெட் கைப்பற்றாமல் வெளியேறியிருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐசிசி டி20 ஆல்ரவுண்டர் ரேங்கிங்.. கோலிக்கு கீழே இருக்கும் ஜடேஜா.. வினோதமான சம்பவம்

இந்த ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றியதின் மூலமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் தர கிரிக்கெட்டில் 1120 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை பத்தாம் தேதி துவங்க இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் உடன் அரிய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுக் கொள்கிறார்!