20 மாதங்களுக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள இங்கிலாந்து – மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் சகாப்தம் தொடங்குகிறது

0
178

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சற்றுமுன்னர் நடந்து முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது.

2வது டெஸ்ட் போட்டியின் போட்டி சுருக்கம்

- Advertisement -

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 553 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்ச்சல் 190 ரன்கள் அடித்தார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் துணை கொண்டு முதல் இன்னிங்ஸ் முடிவில் 539 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் 176 ரன்கள் குவித்தார் அதேபோல ஒல்லி போப் 145 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

14 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த நியூசிலாந்து அணி 284 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்சிலும் அதிகபட்சமாக மிட்செல் 62* ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இன்று 5வது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற 299 ரன்கள் தேவைப்பட்டது.15.2 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் மட்டுமே குறித்து இருந்தது.

- Advertisement -

ஜானி பேர்ஸ்டோ ஆடிய ருத்ரதாண்டவம்

அப்பொழுது உள்ளே வந்த ஜானி பேர்ஸ்டோ முதலில் 51 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். பின்னர் 26 பந்துகளில் அடுத்த 50 ரன்களை குவித்தார். அதாவது 77 பந்துகளில் அவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் இன்று படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற மிக முக்கியமான காரணமாக அமைந்தது பேர்ஸ்டோ மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடையே ஏற்பட்ட பார்ட்னர்ஷிப் தான். 121 பந்துகளில் 179 ரன்கள் அவர்கள் இங்கிலாந்து அணிக்கு சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்சில் மொத்தமாக பேர்ஸ்டோ 92 பந்துகளில் 14 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் உட்பட 136 ரன்கள் குவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 75*(70) ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்பொழுது இங்கிலாந்து அணி 2 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. புதிய தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் மற்றும் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கீழ் இங்கிலாந்து அணி தொடர் வெற்றிகளை பெற்று அசத்தி வருகிறது. 20 மாதங்களுக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணி கைப்பற்றும் டெஸ்ட் தொடர் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.