பாகிஸ்தானை வீழ்த்தி டி20 உலககோப்பையை தட்டித்தூக்கிய இங்கிலாந்து!

0
414

பாகிஸ்தானை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இங்கிலாந்து அணி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற எட்டாவது டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதின. இரு அணிகளும் தலா ஒரு முறை உலக கோப்பையை வென்றிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் வீக்கெட்டுகளை இழந்து வந்தது.

பாகிஸ்தான் அணி துவக்க வீரர்களான ரிஷ்வான்(15) மற்றும் பாபர் அசாம்(32) இருவரும் நீடித்து நிற்கவில்லை. மிடில் ஓவரில் ஷான் மசூத்(38) சற்று நம்பிக்கை அளித்தார். நட்சத்திர ஆல்ரவுண்டர் சதாப்கான் 20 ரன்கள் ஆட்டம் இழந்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

மெல்போர்ன் போன்ற மைதானத்தில் இந்த இலக்கு போதாது. ஆனால் பந்துவீச்சில் பலம் பொருந்திய பாகிஸ்தான் அணி கட்டுப்படுத்த முடிவு செய்து களமிறங்கியது.

அரை இறுதிப் போட்டியில் அசத்திய அலெக்ஸ் ஹேல்ஸ் இம்முறை முதல் ஓவரில் 1 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார். அதன் பிறகு சிறிது நேரம் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்து ஹரிஸ் புரூக் 20 ரன்கள், மொயின் அலி 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து இறுதி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்தார்.

போட்டியின் 19வது ஓவரில் இலக்கை கடந்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் டி20 உலக கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. கடைசி வரை போராடிய பென் ஸ்டோக்ஸ் 52 ரன்கள் அடித்திருந்தார்.