ஒரே டெஸ்ட் போட்டியை மீண்டும் மீண்டும் பார்க்குமாறு வற்புறுத்தும் பயிற்சியாளர் – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு

0
1143
England Cricket Team

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் அந்த இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கையே ஓங்கி இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வெற்றி பெற்றது.

2-0 என்கிற கணக்கில் டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று விட்டாலே டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிடும். எனவே இங்கிலாந்து அணி முடிந்தவரை அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது குறித்து யோசிக்க முடியும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியை மீண்டும் பார்த்து வரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்

இரண்டு டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே சிறப்பாக விளையாடுகிறார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு விளையாடவில்லை. எனவே இங்கிலாந்து அணி நிர்வாகம் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அனைவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை மீண்டும் பார்க்கும்படி அறிவுரை கூறி இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தங்களுடைய விக்கெட்டுகள் எப்படி பரி போனது என்பதை கூர்ந்து கவனித்து, அந்தத் தவறை அவர்கள் திருத்திக் கொள்வதற்காக இந்த அந்த அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 26ஆம் தேதி நடக்க இருக்கின்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இது அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும் என்கிற நோக்கத்தில், இந்த அதிரடி முடிவை இங்கிலாந்து அணி நிர்வாகம் எடுத்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி

வருகிற 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடைசியாக இங்கிலாந்து அணி 2010ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதன் பின்னர் இந்த மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது, மற்றொரு போட்டி டிராவில் முடிவடைந்தது. எனவே 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் இதே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, மறுப்பக்கம் அந்த அணி சமீபத்தில் பெற்றுவரும் தொடர் தோல்விக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.