மொயின் அலி பந்தில் கிளீன் போல்ட் ஆன விராட் கோலியை டிவிட்டர் பக்கத்தில் கலாய்த்த இங்கிலாந்து கிரிக்கெட் ஆர்மி – வீடியோ & டுவீட் இணைப்பு

0
418

2022 ஐ.பி.எல் பதினைந்தாவது சீஸனில், இந்தியளவில் அணிகளின் இரசிகர்கள், வீரர்களின் இரசிகர்கள் இடையேயான சமூக வலைத்தள மோதல்கள், கேலி, கிண்டல் தற்போது உலகளவில் விரிந்து சில நாட்டு இரசிகர்களும் பங்குபெற்று சூட்டை கிளப்பும் நிலைக்குச் சென்றுள்ளது.

சாதாரணமா விராட்கோலி பற்றி ஏதாவது செய்திகளில், இனி விராட் கிடையாது பாகிஸ்தானின் பாபர் ஆஸம்தான், மூன்று வடிவ கிரிக்கெட்டுக்குமான கிங் என்று கமெண்டுகள் இருப்பதை காணலாம். விராட்கோலியின் சமீபத்தில் சரிந்த பேட்டிங் பார்மால், மற்றவர்கள் தரவரிசையில் மேலே வர ஆரம்பித்தது இதற்கு வசதியாகப் போய்விட்டது.

- Advertisement -

இந்த ஐ.பி.எல் தொடரிலும் முதல் ஒன்பது ஆட்டங்களில் விராட்கோலி அடித்த ரன்கள் 128 ரன்கள்தான். இதில் இரண்டு கோல்டன் டக்குகளும் அடக்கம். பத்தாவது ஆட்டத்தில் அரைசதம் அடித்திருந்தாலும் அது பழைய விராட்கோலியின் ஆட்டமாக இல்லை. மந்தமான அரைசதமாகவே அது அமைந்தது. அந்த ஆட்டத்திலும் பெங்களூர் அணி தோற்றது.

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் சென்னை அணியுடனான ஆட்டத்திலும் அவரது ஆட்டம் 20/20 போட்டிக்கான ஆட்டமாக இல்லை. நிறைய பந்துகளை ரன்களாக மாற்ற முடியவில்லை. 33 பந்துகள் ஆடிய அவரால் 30 ரன்களே அடிக்க முடிந்தது. இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் இருந்துமே அவரது ஸ்ட்ரைக்ரேட் 100க்கு கீழ்தான் இருந்தது.

மிகவும் ரன்களுக்கு சிரமப்பட்ட விராட்கோலி இங்கிலாந்தின் மொயீன் அலியின் ஆப்-ஸ்பின் பவுலிங்கில் பந்து திரும்புவதை கணிக்கத்தவறி ஆடப்போய் கிளீன் போல்ட் ஆனார்.சிலபல வருடங்களாகவே மொயீன் அலி பந்துவீச்சில் அவர் தடுமாறுவது வழக்கமாகவே உள்ளது. வெள்ளைப்பந்து போட்டிகளைத் தாண்டி, டெஸ்டில் இங்கிலாந்து, இந்தியா என இரு நாடுகளிலும் வைத்து, அவரது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த முறையும் விராட்கோலி விக்கெட்டை மொயீன் வீழ்த்த, இங்கிலாந்தின் இரசிக ட்வீட்டர் பக்கமான பார்மி ஆர்மி ட்விட்டர் பக்கத்தில், மொயீன் அலியின் பேன்ட் பாக்கெட்டில் விராட் கோலிஇருப்பது போலவும், விராட் கோலி ஸ்ட்ரைக்கில் இருந்தால், மொயீன் அலியைக் கட்டுப்படுத்த முடியாது என, பிரபலமான ஆங்கர்மேன்: தி லெஜன்ட் ஆஃப் ரான் பார்கன்டி படத்தில் வில் பாரெல் கூறும் பிரபலமான “தட் எஸ்கலேட் க்விக்லி” என்ற வரிகளை வைத்து, விராட் கோலியை கேலி செய்திருக்கிறார். தற்போது அதில் இந்திய கிரிக்கெட் அணி இரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்!