2027 ODI WC.. இங்கிலாந்து அணி நேரடி தகுதி பெறுவதில் சிக்கல்.. வெஸ்ட் இண்டீஸ் அபாரம் – நிலவரம் என்ன?

0
63
England

2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதில் இங்கிலாந்து அணிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை என அடுத்தடுத்து இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இரண்டு உலக கோப்பைகளை வென்று அசத்தியது. இதற்கு அடுத்து இங்கிலாந்து வெள்ளைப் பந்து கிரிக்கெட் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

- Advertisement -

இரண்டு மோசமான ஐசிசி கோப்பைகள்

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் இங்கிலாந்து வெளியேறியது. அந்தத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவமாக இங்கிலாந்து கிரிக்கெட்டில் அமைந்தது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மீண்டும் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து இங்கிலாந்து வெளியேறியது. இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 14 ஒருநாள் போட்டிகளில் மூன்று போட்டிகளை மட்டுமே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்துக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்

ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதற்கு மார்ச் 31 2027 ஆம் ஆண்டு ஐசிசி தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் இருக்க வேண்டும். இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி 84 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இங்கிலாந்துக்கு மேலே இருக்கின்றன.

இதையும் படிங்க : இங்கிலாந்து பவுலர்களை பார்த்து விராட் கோலிக்கு பயம்.. அதான் ஓய்வு.. கவுண்டி டீம் வம்பிழுப்பு.. சர்ச்சை பதிவு

வெஸ்ட் இண்டீஸ் அணி ஒன்பதாவது இடத்தில் இருந்தால் கூட ஒரு புள்ளிகள் மட்டும் இங்கிலாந்தை விட குறைவாக 83 புள்ளிகள் உடன் இருக்கிறது. எனவே 2027 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் நடைபெறும் ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி கணிசமாக வெற்றி பெறுவது அவசியம். இல்லையென்றால் அந்த அணி எட்டாவது இடத்திற்கு கீழே இறக்கப்படலாம். மேலும் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமானதாக அமைகிறது.

- Advertisement -